கால்சியம் தைட்டனட்டு
கால்சியம் தைட்டனட்டு (Calcium titanate) என்பது CaTiO3 , என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டுடன் காணப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் கால்சியம் தைட்டானியம் ஆக்சைடு என்றும் அழைக்கப்படுகிறது. கனிமமாக இருக்கும்போது இது பெரோவ்சிகைட்டு என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. 1792–1856 ஆம் ஆண்டைச் சேர்ந்த உருசியாவின் கனிம வேதியியலாளர் எல்.ஏ. பெரோவ்சிகி இக்கனிமத்தைக் கண்டறிந்தார். கால்சியம் தைட்டனட்டு ஒரு நிறமற்ற எதிர்காந்தத் தன்மையுடைய திண்மம் ஆகும். சிலசமயங்களில் கனிமநிலையில் இது அதிலுள்ள மாசுக்களால் நிறம் பெற்றும் காணப்படுகிறது. தொகுப்பு முறைகால்சியம் ஆக்சைடு மற்றும் தைட்டானியம் ஈராக்சைடு இரண்டும் 1300 0 செல்சியசு வெப்பநிலையில் இணைந்து கால்சியம் தைட்டனட்டு உண்டாகிறது. கூழ்மக் – குழைமச் செயல்முறையில் சற்றுக் குறைவான வெப்பநிலையில் அதிகத் தூய்மையான கால்சியம் தைட்டனட்டு தயாரிக்கப்படுகிறது. கூழமக் குழைமத்தில் இருந்து தூள் தயாரிக்கப்படுவதால் இவ்வுப்பு மேலும் அழுந்தக்கூடியதாகவும் கணக்கிடப்பட்ட அளவான (~4.04 கி/மி.லிl) அடர்த்திக்கு நெருக்கமாகவும் உள்ளது.[1][2] அமைப்புகால்சியம் தைட்டனட்டு படிகங்கள் செஞ்சாய்சதுர அமைப்பில் அதிலும் குறிப்பாக பெரோவ்சிகைட்டு அமைப்பில் கிடைக்கின்றன[3]. இந்நோக்குருவில் Ti(IV) மையங்கள் எண்முகமும் மற்றும் Ca2+ மையங்கள் 12 ஆக்சிசன் மையங்களின் கூண்டில் ஆக்ரமிக்கின்றன. பல உபயோகமுள்ள பொருட்கள் இவ்வமைப்புடன் தொடர்புடைய அமைப்புகளை ஏற்றிருக்கின்றன. உதாரணம்: பேரியம் தைட்டனட்டு அல்லது அமைப்பு மாறுபாடு கொண்ட இட்ரியம் பேரியம் தாமிர ஆக்சைடு ஆகியன உதாரணங்களாகும். பயன்கள்தைட்டானியத்தின் தாது என்பதைத் தாண்டி கால்சியம் தைட்டனட்டு மிகக் குறைவான பயன்களைக் கொண்டிருக்கிறது. இச்சேர்மத்தை ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் தைட்டானியம் உலோகம் தயாரிக்கலாம் அல்லது பெர்ரோதைட்டானியம் உலோகக் கலவையைத் [4] தயாரிக்கலாம். மேற்கோள்கள்
இவற்றையும் காண்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia