தைட்டானியம்(II) ஆக்சைடு
தைட்டானியம்(II) ஆக்சைடு (Titanium(II) oxide) என்பது TiO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் தைட்டானியம் மற்றும் ஆக்சிசன் சேர்ந்து உருவாகும் இச்சேர்மத்தை தைட்டானியம் ஈராக்சைடு மற்றும் தைட்டானியம் உலோகத்தை 1500°செல்சியசு வெப்பநிலையில்[1] சேர்த்து தயாரிக்கலாம். TiO0.7 அளவுக்கு TiO1.3 என்ற வீச்சில் சமமற்று விகிதவியலுக்கு ஒவ்வா சேர்மமாக இது காணப்படுகிறது. குறைபாடுள்ள பாறை உப்பு படிகref name = "Wiberg&Holleman"/> அமைப்பில் தைட்டானியம் அல்லது ஆக்சிசனால் ஏற்பட்ட காலியிடத்தால் இந்நிலை தோன்றுகிறது. தூய்மையான தைட்டானியம்(II) ஆக்சைடில் 15% தைட்டானியம் மற்றும் ஆக்சிசன் தளங்கள் இரண்டும் காலியிடங்களாக உள்ளன[1]. கவனமாகக் காய்ச்சி குளிரவைக்கும் போது ஒற்றைச்சரிவு படிகம் உற்பத்தியாகி காலியிடங்களை நிரப்புகிறது. இவ்வடிவில் உயர் தடுப்புத் திறனை வெளிப்படுத்தும் மூலசெல்களில் 5 TiO அலகுகள் உள்ளன[2]. உயர் வெப்பநிலை வடிவத்தில் முக்கோணப் பட்டக ஒருங்கிணைப்பு அறியப்படுகிறது. தைட்டானியம்(II) ஆக்சைடின் அமிலக் கரைசல்கள் குறுகிய காலத்திற்கு நிலைப்புத் தன்மையுடன் இருந்து பின்னர் சிதைவடைந்து ஐதரசன் வாயுவைக் கொடுக்கின்றன:[1].
விண்மீன்களிடை[3] ஊடகத்தில் தைட்டானியம்(II) ஆக்சைடின் ஈரணு மூலக்கூறுகள் இருப்பதற்கான ஆதாரங்கள் அறியப்படுகினன. TiO குளிர் (எம் வகை) நட்சத்திரங்களில் ஒளியியல் நிறமாலையில் வலுவான பட்டைகளைக் காட்டுகிறது.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia