டைட்டானியம் டெட்ராஅயோடைடு
டைட்டானியம் டெட்ராஅயோடைடு (Titanium tetraiodide) TiI4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய கனிமச் சேர்மம் ஆகும். இச்சேர்மம் கருப்பு நிறமுடைய எளிதில் ஆவியாகக் கூடிய திண்மம் ஆகும். 1863 ஆம் ஆண்டில் இச்சேர்மத்தின் இருப்பு முதன் முதலில் ரூடோல்ப் வெபர் என்பவரால் அறிவிக்கப்பட்டது.[1] இச்சேர்மம் டைட்டானியத்தைத் தூய்மைப்படுத்த உதவும் வான் ஆர்கெல் செயல்முறையில் ஒரு இடைநிலைப் பொருளாகும். இயற்பியல் பண்புகள்TiI4 ஒரு அரிதான மூலக்கூறு நிலை இரும உலோக அயோடைடாகும்.Ti(IV) மையங்களைக் கொண்ட நான்முகி தனித்த மூலக்கூறுகளைக் கொண்டதாகும். Ti-I பிணைப்பு நீளமானது 261 பிக்கோமீட்டர்[2] ஆக உள்ளது. இது இச்சேர்மத்தின் மூலக்கூறு நிலையை பிரதிபலிப்பதாக உள்ளது. ஒரு வளிமண்டல அழுத்தத்தில் இச்சேர்மத்தை TiI4 சிதைவின்றி வாலைவடித்துப் பிரித்தெடுக்க முடியம்; இப்பண்பே வான் ஆன்கெல் செயல்முறையில் இச்சேர்மம் பயன்படுத்தப்படுவதன் அடிப்படைக் காரணமாக உள்ளது. TiCl4 சேர்மத்தின் உருகுநிலைக்கும் (உருகுநிலை -24°செல்சியசு) மற்றும் இச்சேர்மத்தின் TiI4 உருகுநிலைக்கும் (உருகுநிலை 150°செல்சியசு) இடையே உள்ள வேறுபாடு கார்பன் டெட்ரா குளோரைடின் உருகுநிலை மற்றும் (உருகுநிலை -23°செல்சியசு) CI4 ன் உருகுநிலைக்கும் (உருகுநிலை 168°செல்சியசு) உள்ள வேறுபாட்டோடு ஒத்ததாக உள்ளது. இது அயோடைடுகளில் வாண்டர்வால்ஸ் இணைப்பானது மற்றவற்றை விட வலிமையான மூலக்கூறிடை விசையாக உள்ளது என்பதை உணர்த்துகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia