தைட்டானியம் டெட்ராபுரோமைடு
தைட்டானியம் டெட்ராபுரோமைடு (Titanium tetrabromide) என்பது TiBr4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இடைநிலை உலோக புரோமைடுகளில் அதிகமாக ஆவியாகக் கூடிய புரோமைடாக இது கருதப்படுகிறது. தைட்டானியம் டெட்ராகுளோரைடு, தைட்டானியம் டெட்ரா அயோடைடு ஆகிய சேர்மங்கள் பெற்றுள்ள பண்புகளின் சராசரி பண்புகளை தைட்டானியம் டெட்ராபுரோமைடு பெற்றுள்ளது. உயர் லூயிசு அமிலப்பண்பும், முனைவற்ற கரிமக் கரைப்பான்களில் அதிகமாகக் கரைவதும் இந்த நான்கு ஒருங்கிணைவுகள் கொண்ட Ti (IV) இன வேதிச்சேர்மங்கள் இனத்தின் சில முக்கிய பண்புகளாகக் கருதப்படுகின்றன. TiBr4 சேர்மம் டையா காந்தப்பண்பு கொண்டதாகும். இது உலோக மையத்தின் d0 அமைப்பை பிரதிபலிக்கிறது [1]. தயாரிப்பும் கட்டமைப்பும்இந்த நான்கு ஒருங்கிணைவு அணைவுச் சேர்மம் நான்முக வடிவத்தை ஏற்றுக்கொள்கிறது. இதை பல வழிமுறைகளில் தயாரிக்க முடியும்.
வினைகள்TiBr4(THF)2 மற்றும் [TiBr5]−. [TiBr5]− போன்ற கூட்டு விளைபொருட்களை [2] 2-மெத்தில்பிரிடின் போன்ற பெரிய ஈந்தணைவி வழங்கிகளுடன் சேர்ந்து தைட்டானியம் டெட்ராபுரோமைடு உருவாக்குகிறது. ஐந்து ஒருங்கிணைவுகள் கொண்ட வடிவமான TiBr4(2-மெத்தில்பிரிடின்) முக்கோண இரட்டைப்பட்டைக்கூம்பு வடிவில் உள்ளது. இதில் பிரிடின் மத்தியகோட்டுத்தளத்தில் அமைந்துள்ளது [3]. கரிமத் தொகுப்பு வினைகளில் தைட்டானியம் டெட்ராபுரோமைடு ஒரு லூயிசு அமில வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது [4]. தைட்டானியத்தின் டெட்ராபுரோமைடும் டெட்ராகுளோரைடும் வினைபுரிந்து கலப்பு டெட்ரா ஆலைடுகளை TiBr4−xClx (x = 0-4) உருவாக்குகின்றன. இந்த மறுபகிர்வு வினையின் வினை வழிமுறை உறுதியில்லாததாகும். முன்மொழியப்படும் ஒரு பாதையும் இருபடிகளின் இடைநிலைகளை அழைக்கிறது [5]. பாதுகாப்புஎளிதில் நீராற்பகுப்பு அடைந்து ஐதரசன் புரோமைடை வெளிவிடுவதால் இச்சேர்மம் அபாயத்தை விளைவிக்கும் சேர்மமாகக் கருதப்படுகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia