காவிரி நீர் மேலாண்மை ஆணையம்

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (Cauvery Water Management Authority (சுருக்கமாக:CWMA) என்பது கருநாடகம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய காவிரி ஆறு பாயும் மாநிலங்களுக்கு இடையே காவிரி ஆற்றின் நீர் வளங்களை நிர்வகிக்க இந்திய அரசின் நீர் வள அமைச்சகத்தின் கீழ் சூன் 1, 2018 அன்று நிறுவப்பட்ட ஒரு ஒழுங்குமுறை அமைப்பாகும்.[1] இந்த ஆணையம் காவேரி நீர் பிணக்குகளுக்கான தீர்ப்பாயம், இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நிறுவப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் சமமான காவிரி நீர் விநியோகம், செயல்படுத்தலை உறுதி செய்கிறது.[2]

வரலாறு

1956ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் தகராறுகள் சட்டத்தின் பிரிவு 6Aஇன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்திய அரசு சூன் 1, 2018 அன்று காவிரி நீர் தொடர்புடைய மாநில அரசுகளுடன் இணைந்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை நிறுவியது.

செயல்பாடுகள்

காவிரி நீர் சேமிப்பு, நியமனம், ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு

  • காவிரி நதியின் நீர் வளங்களின் சேமிப்பு, பங்கீடு, ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாட்டை காவேரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்பார்வையிடுகிறது.
  • காவேரி ஆற்றின் நீர்த்தேக்க செயல்பாடுகள் மற்றும் நீர் வெளியீடுகளை மேற்பார்வையிடுதல்:
  • காவேரி ஆற்றின் நீர்த்தேக்கங்களின் செயல்பாட்டைக் கண்காணித்து, காவேரி நதி நீர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பின்படி நீர் வெளியீட்டை மேற்பார்வையிடுகிறது.

நதிப் படுகையில் உள்ள துயர சூழ்நிலைகளை அடையாளம் காணுதல்

காவிரி நதிப் படுகையில் நீர் பற்றாக்குறை அல்லது துயர சூழ்நிலைகளை இவ்வாணையம் கண்டறிந்து குறைகளை களைகிறது.

தீர்ப்பாயத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதை உறுதி செய்தல்:

  • காவிரி நீர் பிணக்குகளுக்கான தீர்ப்பாயத்தின் தீர்ப்பை சரியாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதே இவ்வாணையத்தின் முதன்மைப் பொறுப்பாகும்.

ஒருங்கிணைந்த முறையில் முக்கியமான நீர்த்தேக்கங்களை இயக்குதல்

காவிரி நதிப் படுகையில் உள்ள முக்கியமான நீர்த்தேக்கங்களின் செயல்பாடுகளை இந்த ஆணையம் ஒருங்கிணைக்கிறது. இதனால் திறமையான நீர் மேலாண்மை உறுதி செய்யப்படுகிறது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya