நிக்கலசு
புனித நிக்கோலஸ் என்பது துருக்கியின் மிரா நகரின் புனித நிக்கலசுக்கு வழங்கப்படும் பெயராகும். தனது வாழ்நாளில் இரகசியமாக பரிசுகளை வழங்கும் பழக்கத்தை கொண்டிருந்த இவர் தற்காலத்தில் தமிழில் கிறித்துமசு தாத்தா, நத்தார் தாத்தா, என அழைக்கப்படுகிறார். நெதர்லாந்திலும் வடக்கு பெல்ஜியத்திலும் செயிண்ட் நிக்கோலஸ் அல்லது சண்டிகிலாஸ் என அழைக்கப்படுகிறார். இவர் கிபி 4வது நூற்றாண்டில் இன்றைய துருக்கியின் மிரா நகரில் வசித்தார். இந்த சரித்திர ஆளுமையின் தாக்கத்தினால் உருவான கற்பனை பாத்திரம் யேர்மனியில் சண்க்ட் நிகொலவுஸ் எனவும் நெதர்லாந்து மற்றும் பிலாண்டர்சில் சிண்டெர்கிலாஸ் எனவும் அழைக்கப்பட்டது, இந்த கற்பனை பாத்திரமே இன்றுள்ள சண்ட குலோஸ் பாத்திரத்துக்கு வித்திட்டது. சிண்டெர்கிலாஸ் நெதர்லாந்திலும் பிலாண்டர்சிலும் முக்கியமான விழாவாகும். இந்நாளில் சரித்திர மனிதரன புனித நிக்கோலஸ் நினைவு கூறப்பட்டு வணங்கப்படுகிறார். புனித நிக்கோலஸ், பல நாடுகளினதும் நகரங்களதும் காப்பாளராகவும் வழிப்படப்படுகிறார். இவற்றையும் பார்க்கவும் |
Portal di Ensiklopedia Dunia