சார்லஸ் பொரோமெயோ
சார்லஸ் பொரோமெயோ (ஆங்கிலம்: Charles Borromeo, இத்தாலியம்: Carlo Borromeo, இலத்தீன்: Carolus Borromeus, 1538–1584) என்பவர் மிலான் உயர்மறைமாவட்டத்தின் கர்தினால்-பேராயராக 1564 முதல் 1584 வரை இருந்தவர் ஆவார். புனித லொயோலா இஞ்ஞாசி, புனித பிலிப்பு நேரி போன்று இவரும் கத்தோலிக்க மறுமலர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர் ஆவார். கத்தோலிக்க திருச்சபையினை சீர்திருத்தி புத்துயிர் அளிக்கும் விதமாக இவர் பலவற்றை செய்தார். குறிப்பாக குருத்துவத்துக்கான பயிற்சி மடங்கள் பலவற்றை இவர் துவங்கினார். கத்தோலிக்க திருச்சபையில் இவர் புனிதர் என ஏற்கப்படுகின்றார். இவரின் விழா நாள் 4 நவம்பர் ஆகும். வாழ்க்கை சுருக்கம்இத்தாலியில் பிறந்த இவர் தனது 12ஆம் அகவையில் மடத்தில் சேர்ந்து தனது 25ஆம் அகவையில் குருத்துவ குருத்துவத் திருநிலைப்பாடு பெற்றார். குடிமைச் சட்டவியல் மற்றும் திருச்சபைச் சட்டவியல் ஆகியவற்றைக் கற்று, முனைவர் பட்டத்தை (Doctorate in utroque iure) டிசம்பர் 6, 1559இல் பெற்றார்[2]. திருத்தந்தை நான்காம் பயஸ் (ஜோவான்னி ஆஞ்செலோ மெடிசி) இவரது தாயின் சகோதரனாவர். அவர் இவரை கர்தினாலாகவும் மிலான் நகரின் பேராயராகவும் உயர்த்தினார். திருச்சபையை ஆள்வதில் திருத்தந்தைக்கு இவர் பேருதவியாய் இருந்தார். உரோமையிலிருந்துகொண்டு திருச்சபைக்காக உழைத்தார். நான்காம் பயஸின் இறப்புக்குப்பின்பு திருத்தந்தை ஐந்தாம் பயஸின் அனுமதியுடன் இவர் மிலான் நகருக்கு ஆயராக நியமிக்கப்பட்டு பணியாற்றச் சென்றார். தமது மறைமாவட்டத்தை இவர் சீர்திருத்த தொடங்கினார்.[3] இவர் செய்த முயற்சிகளால் திருச்சபை செழித்து ஓங்கியது. திருச்சபைக்கு இவர் பல நன்மைகள் செய்தார். திரிதெந்தின் பொதுச்சங்கம் வெற்றியுடன் முடிய இவர் பேருதவி செய்தார். அந்த சங்கத்தின் தீர்மானங்களை தமது மறைமாவட்டத்தில் நடைமுறைக்கு கொண்டுவந்தார். நாட்டில் கொள்ளைநோய் பரவியது. அப்பொழுது இவர் தம் மக்களின் பாவங்களுக்காக கடவுள் மக்களைத் தண்டிக்கிறார் என்று நம்பி தம்மையே பலிபொருளாக கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தார். தவ ஊர்வலத்தின்போது தெருக்களில் வெறும் காலுடன் நடந்தார். தோளில் ஒரு சிலுவையை தூக்கிச் சென்றார். கழுத்தில் ஒரு கயிற்றை கட்டிக்கொள்வார். கல்லூரிகளும் குருமடங்களும் கட்டுவித்து அங்கு குருக்களுக்கு உதவியாக இருக்கும்படி சிறந்த நூல் நிலையம் ஒன்று ஏற்படுத்தினார். கொள்ளை நோய் காலத்தில் நோயாளிகளுடனும் சாகக் கிடந்தவர்களுடனும் தங்கி அவர்களுக்கு பேருதவி செய்யும்படி தமது உடைமைகளைக் கொடுத்தார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia