அந்தியோக்கு இஞ்ஞாசியார்
அந்தியோக்கு இஞ்ஞாசியார் (Ignatius of Antioch, பண்டைக் கிரேக்கம்: Ἰγνάτιος (சுமார் கிபி 35 - கிபி 108)[1], அல்லது தியோபோரஸ் (Θεοφόρος அதாவது கடவுளை தாங்குபவர்) என கிரேக்க மொழியில் அறியப்படும் அந்தியோக்கு நகர இஞ்ஞாசியார், அந்தியோக்கியா நகரின் மூன்றாம் ஆயரும், திருச்சபையின் தந்தையரும், திருத்தூதர் யோவானின் சீடரும் ஆவார்.[2][3] இவரைக் கொல்ல உரோமைக்கு இட்டு சென்ற வழியில் இவர் பல கடிதங்களை எழுதியுள்ளார். இக்கடிதங்களின் மூலம் ஆதி கிறித்தவர்களின் விசுவாசம் மற்றும் நம்பிக்கையினைப் பற்றி அறிய முடிகின்றது. இவரின் கடிதங்களில் திருவருட்சாதனங்கள், ஆயர்களின் பணி முதலியவைப்பற்றி எழுதியுள்ளார். கத்தோலிக்க திருச்சபை என்னும் சொல்முறையை முதன்முதலாக எழுத்தில் பயன்படுத்தியவர் இவரே. கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் காப்டிக் கிழக்கு மரபுவழி திருச்சபையில் இவரின் விழா நாள் திசம்பர் 20. கத்தோலிக்க திருச்சபையில் இவரின் விழா நாள் 17 அக்டோபர் ஆகும். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia