பீட்டர் கனிசியு

புனித பீட்டர் கனிசியு, சே.ச.
குரு, மறைப்பணியாளர், மறைவல்லுநர்
பிறப்பு(1521-05-08)8 மே 1521
நெதர்லாந்து
இறப்பு21 திசம்பர் 1597(1597-12-21) (அகவை 76)
ஃப்ரிபோர்க், சுவிட்சர்லாந்து
வணங்கும் திருஅவைகள்கத்தோலிக்க திருச்சபை
அருளாளர் பட்டம்1864, உரோமை by ஒன்பதாம் பயஸ்
புனிதர் பட்டம்21 மே 1925, உரோமை by பதினொன்றாம் பயஸ்
முக்கிய திருத்தலங்கள்புனித மிக்கேல் கல்லூரி
ஃப்ரிபோர்க், சுவிட்சர்லாந்து
திருவிழா21 டிசம்பர்; 27 ஏப்ரல் (1926-1969)
பாதுகாவல்கத்தோலிக்க இதழ்கள், செருமனி நாடு

புனித பீட்டர் கனிசியு (டச்சு: Pieter Kanis), (8 மே 1521 – 21 டிசம்பர் 1597) என்பவர் ஒரு இயேசு சபை குருவும் கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தின் போது செருமனி, ஆசுதிரியா, போகிமியா, மோராவியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியநாடுகளில் கத்தோலிக்க திருச்சபையின் படிப்பினைகளை மக்களுக்கு புரியுமாறு விளக்கி கூறியவரும் ஆவார். கத்தோலிக்க திருச்சபை கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்திற்குப் பின்பு செருமனியில் கண்ட மறுமலர்ச்சிக்கு இவரும் இயேசு சபையுமே காரணம் என நம்பப்படுகின்றது.

இவர் கத்தோலிக்க திருச்சபையில் புனிதர் எனவும் திருச்சபையின் மறைவல்லுநர் எனவும் ஏற்கப்படுகின்றார்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya