ரபேல் (அதிதூதர்)
ரபேல் (ஆங்கிலம்: Raphael; எபிரேயம்: רָפָאֵל, Rāfāʾēl, "கடவுள் குணமளிக்கின்றார்") யூத மற்றும் கிறித்தவ மரபுப்படி குணப்படுத்தும் இறைதூதர் ஆவார். கத்தோலிக்கர்கள் மற்றும் மரபு வழி திருச்சபையினரால் இறையேவுதல் பெற்ற நூலாக ஏற்கப்பட்ட விவிலியத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியாகிய இணைத் திருமுறைத் தொகுப்பைச் சேர்ந்த ஏழு நூல்களுள் ஒன்றான தோபித்து நூலில் அதிதூதர் புனித ரபேல், குறிக்கப்பட்டுள்ளார். விவிலியத்தில் பெயரோடு குறிக்கப்படுள்ள மூன்று தூதர்களுள் இவரும் ஒருவர் ஆவார். விவிலியத்தில் கடவுளுடைய முன்னிலையில் பணிபுரியும் ஏழு வானதூதர்களுள் ஒருவர் தாம் என இவரே குறிப்பிடுவதாக உள்ளது.[1] இவரே தோபியாசும் அவர் மருமகள் சாராவும் மன்றாடியபோது அவர்களின் வேண்டுதல்களையும் நற்செயல்களையும் எடுத்துச்சென்று ஆண்டவரின் திருமுன் ஒப்படைதவரும், தோபியாசை சோதிக்க அனுப்பப்பட்டவரும், அவருக்கும் அவரின் மருமகள் சாராவுக்கும் நலம் அருளக் கடவுளால் அனுப்பப்பட்டவரும் ஆவார்.[1] தூய மிக்கேல் மற்றும் தூய கபிரியேலோடு சேர்ந்து கத்தோலிக்க திருச்சபையில் இவரின் விழா நாள் செப்டம்பர் 29 ஆகும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia