நீல பத்மநாபன் கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் 1938 ஏப்ரல் 26 ஆம் நாள் நீலகண்டப்பிள்ளை - சானகி அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.[1]
கல்வி
நீல பத்மநாபன் நாலாஞ்சிறை எனும் இடத்திலிருந்த மார் இவானியேஸ் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் (Intermediate) தேறினார்.[8] கேரளப் பல்கலைக்கழகக் கல்லூரியில் 1956 - 58 ஆம் கல்வி ஆண்டுகளில் இயற்பியல் பயின்று அறிவியல் இளவர் பட்டம் பெற்றார்.[8] பின்னர் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து மின்பொறியியலில் அறிவியல் இளவர் பட்டம் (B.Sc. Electrical Engineering) பெற்றார்.[1]
பணி
நீல பத்மநாபன் கல்லூரியில் பயிலும்பொழுதே, கேரள பணியாளர் தேர்வாணையத் தேர்வை எழுதி வெற்றி பெற்றிருந்தார். எனவே கல்லூரிக் கல்வி முடிந்ததும் திருச்சூரில் அரசு அலுவலகம் ஒன்றில் சில காலம் பணியாற்றினார். தந்தை வற்புறுத்தலினால் அவ்வேலையைத் துறந்து பொறியியல் படிக்கச் சென்றார்.[8]
1963ஆம் ஆண்டில் கேரள மாநில மின்வாரியத்தில் இளநிலை மின்பொறியாளராகப் (Junior Engineer) பணியிற் சேர்ந்தார். படிப்படியாக உயர்ந்து 1993 ஆம் ஆண்டில் துணை முதன்மைப் பொறியாளராக (Deputy Cheif Engineer) பணி ஓய்வு பெற்றார்.[1]
குடும்பம்
நீல பத்மநாபன் கிருட்டிணம்மாள் என்பவரை மணந்து சானகி, உமா, நீலகண்டன், கவிதா என்னும் நான்கு மக்களை ஈன்றார்.[1]
படைப்புகள்
"கதைக் கருவைத்தேடி நான் ஒரு போதும் அலைந்திருக்கவில்லை. ஒரு பிரத்யேக கணத்தின் தெறிப்பில், ஏனோ ஒரு சொல்லத்தெரியாத தன்மையில் சிலிர்த்துப்போய் நேரிலும் காணும், சொல்லிக்கேட்கும் சில கருத்துக்களை மட்டும் என் மனம் சுவீகரித்துக் கொள்கிறது. உதறினாலும் விலகாமல் உள்ளத்தில் இறுகப்பற்றிக்கொள்ளும் இந்தக்கரு தன்னை எடுத்தாள என்னை விடாப்பிடியாக நிர்பந்திக்கிறது. இரும்பு இதயம் படைத்தவர்களுக்காக நான் எழுதவில்லை. காரணம் எனக்கு இரும்பு இதயம் இல்லை என்பதுதான், என்னைப்போல் சாதாரண ஆசை நிராசைகள் கொண்ட சாதாரண மனித ஜீவிகளுடன் என் பிரச்னைகள், உணர்ச்சிகளை, வியப்புகளை ,வெறுப்புகளை பரிமாறிக்கொள்ளவே நான் எழுதுகிறேன்" என்று நீல பத்மநாபன் தன்னைப் பற்றி குறிப்பிட்டதுண்டு.
PEARLS AND PEBBLES. 2004. 19 Essays, Reliance Publishing House, New Delhi-110008
கொய்தமலர்கள்
நீல பத்மநாபனின் எழுத்துலக விழுதுகள் 2002
Neela Padmanaban - A Reader 2008
நீல பத்மநாபம் 2010
நீல பத்மநாபனின் படைப்புகள் பற்றிய திறனாய்வுகள்
நீல பத்மநாபனின் இலக்கியத்தடம் 1999
நீல பத்மநாபன் படைப்புலகம் 2001
விருதுகளும் பரிசுகளும்
உறவுகள் என்னும் புதினம் ராஜா அண்ணாமலைச் செட்டியார் பரிசினைப் பெற்றது.
தமிழ் அன்னை விருது
முதியோர் இல்லத்தைக் கதைக் களனாகக் கொண்டு நீல பத்மநாபன் எழுதிய இலை உதிர் காலம் புதினம், 2007ஆம் ஆண்டின் தமிழ் நூல்களுக்கான சாகித்திய அகாதமி விருது, கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையத்தின் ரங்கம்மாள் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.