பட்டாலிக்

பட்டாலிக்
பட்டாலிக் is located in லடாக்
பட்டாலிக்
பட்டாலிக்
இந்தியாவின் லடாக் பிரதேசத்தின் பட்டாலிக்கின் அமைவிடம்
பட்டாலிக் is located in இந்தியா
பட்டாலிக்
பட்டாலிக்
பட்டாலிக் (இந்தியா)
ஆள்கூறுகள்: 34°39′N 76°20′E / 34.65°N 76.33°E / 34.65; 76.33
நாடு இந்தியா
ஒன்றியப் பகுதிலடாக்
மாவட்டம்கார்கில்
வருவாய் வட்டம்கார்கில்
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
194103[1]

பட்டாலிக் (Batalik), இந்தியாவின் வடக்கில் அமைந்த லடாக் ஒன்றியப் பகுதியின் கார்கில் மாவட்டம், கார்கில் வருவாய் வட்டத்தில் மலைகள் சூழ்ந்த சிற்றூர் ஆகும். இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பிரதேசமான கில்கித்-பஸ்டிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்த இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஊராகும். இது கார்கில், லே மற்றும் பல்திஸ்தான் பகுதிகளுக்கு மையத்தில் அமைந்த பட்டாலிக் ஊர் ஒரு இராணுவ கேந்திரம் ஆகும்.[2] 1999-ஆம் ஆண்டில் இப்பகுதியில் கார்கில் போர் நடைபெற்றது.[3] பட்டாலிக் கார்கில் நகரத்திற்கு வடகிழக்கில் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[4] பேரரசர் அலெக்சாந்தர் படைவீரர்களின் வழித்தோன்றல்களான பரோக்பா மக்கள்[5] பட்டாலிக் பகுதியில் வாழ்வதாக கருதப்படுகிறது. பட்டாலிக் பகுதி மக்கள் திபெத்திய பௌத்தம், சியா இசுலாம் மற்றும் இந்து சமயங்களைப் பின்பற்றுகின்றனர்.

போக்குவரத்து

சாலை

தேசிய நெடுஞ்சாலை 1, பட்டாலிக்கை கார்கில், லே மற்றும் சிறீநகருடன் இணைக்கிறது.

மலைகள் சூழ்ந்த பட்டாலிக் ஊரின் காட்சி
சிந்து ஆறும் சாலையும் இணையும் இடம்

இதனையும் காண்க

மனோஜ் குமார் பாண்டே - கார்கில் போர் வெற்றி வீரர்

மேற்கோள்கள்

  1. "Batalik (Google Maps)". Google Maps. Retrieved 29 April 2020.
  2. "Kargil anniv: 10 years later the war is Drass versus Batalik". Indiatoday.intoday.in. 2009-07-27. Retrieved 2017-09-30.
  3. "BATTLE FOR BATALIK". The Tribune. Retrieved 2017-09-30.
  4. "Now, go for a vacation to Kargil war battlefield Batalik". Dnaindia.com. 2010-05-28. Retrieved 2017-09-30.
  5. இந்தியாவில் 'தூய ஆரிய' ஆண்களிடம் கர்ப்பம் தரிக்க ஜெர்மானிய பெண்கள் வந்தார்களா?


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya