பாக்கித்தான் துடுப்பாட்ட அணி அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆத்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று இ20ப போட்டிகள் மற்றும் இரு தேர்வுப் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தேர்வுத் தொடர் 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாக இடம்பெறுகிறது. இதன் இரண்டாவது தேர்வுப் போட்டி பகல்/இரவுப் போட்டியாக நடைபெறுகிறது.
முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட பிறகு அடுத்த இரு போட்டிகளிலும் வென்ற ஆத்திரேலியா இ20ப தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.[5] மேலும் தேர்வுத் தொடரின் இரு போட்டிகளிலும் ஆட்டப்பகுதி அடிப்பைடையில் வென்ற ஆத்திரேலியா 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.[6]
அணிகள்
இ20ப தொடர்
1வது இ20ப
- நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலிய அணி களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக ஆட்டம் தொடர்ந்து நடைபெறவில்லை.
- பாபர் அசாம் இ20ப போட்டிகளில் முதன்முறையாக பாக்கித்தான் அணிக்குத் தலைமை தாங்கினார்.[10]
- ஆரோன் பிஞ்ச் ஆத்திரேலிய அணிக்காக அதிகளவு இ20ப போட்டிகளில் விளையாடிய அணித்தலைவர் என்ற சாதனையைப் படைத்தார்.[11]
2வது இ20ப
- நாணயச்சுழற்சியில் வென்ற பாக்கித்தான் அணி மட்டையாடத் தீர்மானித்தது.
- இதுவே இந்த அரங்கத்தில் நடைபெற்ற முதல் இ20ப போட்டியாகும்.[12]
3வது இ20ப
10 இழப்புகளால் ஆத்திரேலியா வெற்றி பேர்த் அரங்கம், பேர்த் நடுவர்கள்: சாம் நோகாஸ்கி (ஆசி.), பவுல் வில்சன் (ஆசி.) ஆட்ட நாயகன்: சீன் அப்போட்(ஆசி.)
|
- நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலிய அணி களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- முகம்மது மூசா, குஷ்தில் ஷா (பாக்.) ஆகிய இருவரும் தங்கள் முதல் தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
- இதுவே இந்த அரங்கத்தில் நடைபெற்ற முதல் இ20ப போட்டியாகும்.[13]
தேர்வுத் தொடர்
1வது தேர்வு
- நாணயச்சுழற்சியில் வென்ற பாக்கித்தான் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
- நசீம் ஷா (பாக்.) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- மார்னசு லபுசேன் (ஆசி) தேர்வுப் போட்டிகளில் தனது முதலாவது நூறைப் பதிவு செய்தார்.
- உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: ஆத்திரேலியா 60, பாக்கித்தான் 0
2வது தேர்வு
- நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலிய அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
- முகம்மது மூசா (பாக்.) தனது முதல் தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- ஜோசு ஆசில்வுட் (ஆசி.) தனது 50வது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[14]
- டேவிட் வார்னர் (ஆசி.) தனது முதல் தேர்வு முந்நூறை எடுத்தார்.[15]
- ஸ்டீவ் சிமித் (ஆசி.) விரைவாக 7,000 ஓட்டங்களைக் கடந்தவர் என்ற சாதனையைப் படைத்தார் (126 ஆட்டப்பகுதிகளில்).[16]
- யாசிர் ஷா (பாக்.) தேர்வுப் போட்டிகளில் தனது முதல் நூறை எடுத்தார்.[17]
- உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: ஆத்திரேலியா 60, பாக்கித்தான் 0.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்