பாடாங் பெசார் மக்களவைத் தொகுதி
பாடாங் பெசார் (மலாய்: Padang Besar; ஆங்கிலம்: Padang Besar; சீனம்: 巴东勿刹; என்பது மலேசியா. பெர்லிஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P001) ஆகும். இந்தத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முன்பு இந்தத் தொகுதி கங்கார் (மக்களவைத் தொகுதி)யின் ஒரு பகுதியாக இருந்தது. அந்தத் தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு ஒரு புதிய தொகுதியாக உருவாக்கப்பட்டது 1995-ஆம் ஆண்டு முதல் மலேசிய மக்களவையில் (Dewan Rakyat) இந்தத் தொகுதி பிரதிநிதிக்கப் படுகிறது. பொது2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் (2022 Malaysian General Election) இந்தத் தொகுதியில் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியின் மலேசிய இஸ்லாமிய கட்சியின் சார்பில் ருசுதான் ருசுமி (Rushdan Rusmi) என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியின் பரப்பளவு 450 சதுர கி.மீ. 2022-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி 60,192 வாக்காளர்கள் உள்ளனர்.[2] 2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலுக்கு முன்னர், மலேசியா விடுதலை பெற்ற 1957-ஆம் ஆண்டில் இருந்து, கடந்த 14 பொதுத் தேர்தல்களிலும் இந்தத் தொகுதி பாரிசான் கூட்டணியின் கோட்டையாக விளங்கி வந்தது. பாடாங் பெசார்பாடாங் பெசார் நகரம் பெர்லிஸ் மாநிலத்தில் மலேசியா-தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ளது. இதுவே மலேசியாவின் ஆக வடக்கே உள்ள நகரம். இதனை மலேசிய நாட்டின் நுழைவாயில் நகரம் என்றும் அழைப்பது உண்டு. கங்கார் நகரத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவிலும்; தாய்லாந்து அட் யாய் நகரத்தில் இருந்து 70 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இங்குள்ள உள்ளூர்வாசிகள் பாடாங் பெசார் நகரத்தை பெக்கான் சியாம் அல்லது சயாம் நகரம் என்றும் அழைக்கிறார்கள்.[3] இரு நாடுகளின் எல்லை சோதனைச் சாவடிகளுக்கு இடையில் இந்த நகரம் அமைந்து இருப்பதால், இந்த நகரத்தை கடைவலச் சொர்க்கம் என்றும் அடைமொழி பெற்று உள்ளது. மலேசியர்களின் பிரபலமான இடமாக விளங்கும் இந்த நகரம் ஒவ்வொரு வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களில் பல ஆயிரம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது.[4] பாடாங் பெசார் மக்களவைத் தொகுதி
பாடாங் பெசார் தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia