பாரம்பரிய கட்சி அல்லது சபா பாரம்பரிய கட்சி (வாரிசான்) (ஆங்கிலம்: Heritage Party (Warisan Malaysia); மலாய்: Parti Warisan (Warisan); சீனம்: 人民復興黨; சாவி: ڤرتي واريثن ) என்பது மலேசியாவின்சபா மாநிலத்தில் இயங்கும் ஓர் அரசியல் கட்சியாகும்.[1]
முன்பு இந்தக் கட்சி, சபா பாரம்பரிய கட்சி (ஆங்கிலம்: Sabah Heritage Partyமலாய்: Parti Warisan Sabah) என்று அழைக்கப்பட்டது. சபா மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டு 2016 அக்டோபர் 17-ஆம் தேதி சாபி அப்டால் (Shafie Apdal) தலைமையில் இந்தக் கட்சி உருவாக்கப்பட்டது.
2021-ஆம் ஆண்டு இறுதி வாக்கில், இந்தக் கட்சியின் செயல்பாடுகள் தேசிய அளவில் விரிவடைந்தன. இதன் விளைவாக இந்தக் கட்சியின் பெயர் பாரம்பரிய கட்சி (Heritage Party) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[2][3]
தீபகற்ப மலேசியாவில் வாரிசான் போட்டியிட விரும்பவில்லை என்றும் சாபி அப்டால் கூறியுள்ளார். ஆனாலும், தேசிய அளவில் உடன்படிக்கை எதுவும் செய்து கொள்ளாமல் பாக்காத்தான் கூட்டணியுடன் இணைந்து பணியாற்ற தம்முடைய பாரம்பரிய கட்சி தயாராக உள்ளது என்றும் சாபி அப்டால் கருத்து தெரிவித்தார்.
பாரம்பரிய கட்சி தொடங்கப்பட்ட தொடக்கக் காலத்தில், தம்முடைய கட்சி பல இனங்களைக் கொண்ட கட்சி என்றும்; தீபகற்ப மலேசியாவில்பாக்காத்தான் கூட்டணியின் அரசியல் பாணியை தம்முடைய பாரம்பரிய கட்சி பின்பற்றப் போவது இல்லை என்றும் வெளிப்படையாகக் கூறினார்.[5]
மலேசிய அரசியல் நெருக்கடி 2020
இருப்பினும் புத்ராஜெயாவில்பாக்காத்தான் கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால், மத்திய அமைச்சரவையில் பாரம்பரிய கட்சிக்கும் அமைச்சர்கள் பதவிகள் கிடைக்கலாம் என்றும்; அதே வேளையில் சபா மாநில அரசாங்கத்தில்பாக்காத்தான் அமைச்சர்களும் மாநிலச் சேவையில் அமர்த்தப் படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.[6]
அதற்கு முன்னர் பாரம்பரிய கட்சி, சபா மாநிலத்தை ஆட்சி செய்யும் கட்சியாக இருந்தது. 2020 சபா மாநிலத் தேர்தலில், சபா மாநில அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள பாரம்பரிய கட்சி ஒரு தனிப் பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டது.[8]
இருப்பினும் 2022-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில்பாக்காத்தான் கூட்டணி அறுதிப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றது. பாரிசான் நேசனல் கூட்டணியுடன் நடுவண் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டது. அதன் விளைவாக இந்தப் பாரம்பரியக் கட்சிக்கும் நடுவண் அரசாங்கப் பதவிகள் வழங்கப் பட்டன.[9][10]