ஆராவ் மக்களவைத் தொகுதி
![]() ஆராவ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Arau; ஆங்கிலம்: Arau Federal Constituency; சீனம்: 亚娄国会议席) என்பது மலேசியா, பெர்லிஸ், மாநித்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P003) ஆகும்.[3] ஆராவ் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1974-ஆம் ஆண்டில் இருந்து ஆராவ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[4] ஆராவ்ஆராவ் (மலாய்: Arau) மலேசியா, பெர்லிஸ் மாநிலத்தில் உள்ள ஓர் அரச நகரம். பெர்லிஸ் மாநிலத்தின் தலைநகரமான கங்கார் நகரில் இருந்து தென்கிழக்காக 10 கி.மீ. தொலைவில் உள்ளது. பெர்லிஸ் மன்னரின் அரண்மனையும் (Royal Palace), அரச பள்ளிவாலும் (Perlis State Mosque) இந்த நகரில் உள்ளன. கோலா பெர்லிஸ்கோலாலம்பூரில் இருந்து தொடருந்து மூலமாக லங்காவி (Langkawi) தீவிற்குச் செல்ல விரும்பும் சுற்றுப் பயணிகள் ஆராவ் நகரில் இறங்கி, அதன் பின்னர் கோலா பெர்லிஸ் செல்கின்றனர். அங்கிருந்து லங்காவி தீவிற்குப் படகுகள் மூலமாகச் செல்ல வேண்டும். மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் இங்கு அமைந்துள்ளது. மாரா தொழில்நுட்பக் கழகம் என்று முன்பு அழைக்கப்பட்டது. 1999-ஆம் ஆண்டு பலகலைக்கழகத் தகுதியைப் பெற்றது. 2023-ஆம் ஆண்டில், இந்தப் பல்கலைக்கழகத்தில் 5974 மாணவர்கள் 37 கல்வித் துறைகளில் பயில்கின்றனர்.[5] ஆராவ் மக்களவைத் தொகுதி
ஆராவ் தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia