புதுநிலவு![]() புதுநிலவு, மறைமதி அல்லது அமாவாசை என்பது நிலவின் முதல் கலை ஆகும். வானியல்படி நிலவும் கதிரவனும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நாளே புதுநிலவு ஆகும்.[1] இந்நாளில் கதிரவ ஒளியானது புவியில் இருந்து காண இயலாத நிலவின் பிற்பக்கத்தில் முழுமையாகப் பதிகிறது. எனவே இந்நாளில் புவியை நோக்கி இருக்கும் நிலவின் முற்பக்கம் ஒளியின்றி இருக்கும். நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதையானது சுமார் ஐந்து பாகைகள் அளவுக்கு சாய்வாக இருக்கிறது. எனவே புதுநிலவு நாட்களில் கதிரவ வெளிச்சத்தால் ஏற்படும் நிலவின் நிழல் பெரும்பாலும் புவியின் மீது விழுவதில்லை. அவ்வாறு விழும்போது கதிரவ மறைப்பு நிகழும். ![]() புதுநிலவு ஒரு இருள் நிறைந்த வட்டம் போன்று இருக்கும். இது எப்போதும் கதிரவனுடன் ஒரே நேரத்தில் எழுந்து மறைந்து விடுவதால் இதைக் காண இயலாமல் போகிறது. எனினும் முழுக் கதிரவ மறைப்பு நிகழ்வின் உச்ச நிலையின் போது மட்டும் புதுநிலவை வெறும் கண்களால் காண இயலும்.[2] சந்திரமானம் எனப்படும் நிலவை அடிப்படையாகக் கொண்ட சில காலக்கணிப்பு முறைகளில் புதுநிலவு நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படுகிறது. இந்து சமயத்தில் திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள் அமாவாசையும் ஒன்று. இவற்றையும் பார்க்கவும்
ஆதாரம்
|
Portal di Ensiklopedia Dunia