சந்திர தேவன்
சந்திரன் (Chandra; சமக்கிருதம்: चन्द्र) என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் நவகிரகங்களில் ஒருவராவார். இவருக்கு சோமன் என்ற பெயரும் உண்டு.[1][2][3] வானில் நட்சத்திரங்களாக வலம் வருகின்ற தட்சனின் 27 மகள்களும் சந்திரன் மேல் காதல் கொண்டார்கள். சந்திரனை அடிமை யாய் அடையும் பொருட்டு பிரம்மா தவம் செய்வித்தார். இருப்பினும் இவர்களில் மிகவும் அழகான ரோகினியுடன் மட்டும் சந்திரன் காலம் கழித்தார். அதனால் தங்கள் தந்தையிடம் நட்சத்திர பெண்கள் புகார் தெரிவித்தனர். தனது மகள்களை சமமாக நடத்தாதமையினால் சந்திரன் அழகு நாளொன்றுக்கு ஒன்று என அழிந்து மறைந்து போகும்படி தட்சன் சாபமிட்டார். பதினான்கு அழகுகளையும் இழந்த சந்திரன் மீதமிருக்கும் அழகினை காப்பாற்ற சிவபெருமானிடம் தஞ்சமடைந்தார். சோமநாதர் எனும் அஸ்தகிரிநாதர் மதுரை கிழக்கே பொ.ஊ. 8 நுாற்றாண்டில் மன்னர்களால் உருவாக்கப்பட்ட குடைவரை கோவிலில் சந்திரனுக்கு தனி சன்னதியாக அஸ்தகிரிநாதர் எனும் திருமேனியில் லிங்க சொருபமாக அருள்பாலிக்கிறார். சூரியன் அஸ்தமனம் ஆகும் போது இவர் மீது பட்டே திரும்பும் இவ்விடம் யாருக்கு தெரியாத இடமே. இவை மதுரை கிழக்கே வரிச்சியுரிலிருந்து அருகில் திருக்குன்றத்துார் (குன்னத்துார்) எனும் இடத்தில் அமைந்துள்ளது. காலை 8.00 முதல் 10.00 மணி வரை திறந்து இருக்கும். பௌர்ணமி மற்றும் பிரதோச நாளில் காலையிருந்து மாலை வரை திறந்து இருக்கும். கந்தமா தனங்கயிலை மலைகே தாரங் காளத்தி கழுக்குன்றங் கண்ணா ரண்ணா மந்தமாம் பொழிற்சாரல் வடபற்பதம் மகேந்திரமா மலைநீலம் ஏம கூடம் விந்தமா மலைவேதஞ் சையம் மிக்க வியன்பொதியின் மலைமேரு உதயம் அத்தம் இந்துசே கரனுறையும் மலைகள் மற்றும் ஏத்துவோம் இடர்கெடநின் றேத்து வோமே மலை – 17 தலங்கள் கந்தமாதனம், கயிலைமலை, கேதாரம், காளத்தி, கழுக்குன்றம், அண்ணாமலை, வடபற்பதம், மகேந்திரமாமலை, நீலமலை, ஏமகூடமலை, விந்தமாமலை, வேதமலை, சையமலை, பொதியின் மலை. மேருமலை, உதயமலை, அத்தமலை ஆகிய இவையும் பிறவுமாகிய சந்திரனை முடியிலணிந்த சிவபெருமானுடைய மலைகளைப் புகழ்வோம். எம் இடர்கெடத் திசைநோக்கி நின்று அவற்றைப் புகழ்ந்து போற்றுவோம்.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia