வளர்பிறை
சூரியன், சந்திரன், பூமி ஆகியவை கிட்டத்தட்ட நேர்கோட்டில் அமைவதே அமாவாசை (conjunction). அதற்கடுத்த நாட்களில், சந்திரன் சூரியனிலிருந்து சுமார் 12 டிகிரிக்கு மேல் விலகிய நிலையில், முதல் பிறை (crescent/هلال) மெல்லிய கீற்றாக சூரியன் மறைந்ததும் மேற்கு வானில் தெரிகிறது. அடுத்த நாட்களில், சூரியனிலிருந்து சந்திரனின் விலகல் கோணம் (elongation) அதிகரிக்கும்போது, சந்திரன் உருவத்தில் வளரத் தொடங்குகிறது. ஏழாம் நாள், சந்திரன் சூரியனிலிருந்து சுமார் 90 டிகிரி கோணவிலகலில் இருக்கும். அந்த வேளையில், சூரியன் மறையும் பொழுது சந்திரன் தெற்கு வானில் பாதியாக (first quarter) காட்சியளிக்கிறது. இவ்வாறு சந்திரனின் கோணவிலகல் (angular distance) தொடர்ந்து அதிகரித்து, 14ஆம் நாள், சுமார் 180 டிகிரிக்கு விலகிய நிலையில், சூரியன் மேற்குக் கிழக்கு வானில் மறையும்போது, சந்திரன் கிழக்கு வானில் முழு நிலவாக (full moon/بدر) தோன்றுகிறது. சந்திரனின் முதல் பிறை முதல் 14ஆம் நாள் வரை உள்ள காலத்தை வளர் பிறை (waxing moon) என அழைக்கின்றனர். 14ஆம் நாளுக்குப் பின், சந்திரனும் சூரியனும் இடையிலான கோண வித்தியாசம் குறையத் தொடங்குகிறது. இதனால் சந்திரன் தேய் பிறை (waning moon) நிலையில் செல்லத் தொடங்குகிறது. முஸ்லிம்கள், சந்திர மாதத்தை முதல் பிறை தோன்றியதும் துவக்குகிறார்கள்.
இவற்றையும் பார்க்கவும் |
Portal di Ensiklopedia Dunia