இராசிச் சக்கரம்

மேற்கத்திய முறையில் வரையப் பட்டுள்ள இராசிச் சக்கரம்

இராசிச் சக்கரம் அல்லது ஓரை வட்டம் (தமிழ்வழக்கு) என்பது பன்னிரண்டு ஓரை மண்டலங்கள், நவக்கிரகங்கள், பன்னிரு வீடுகள், இருபத்தியேழு விண்மீன்கள் ஆகியவற்றை கொண்ட சோதிடப் பொறிமுறையாகும். இந்த ஓரை வட்டம் பன்னிரண்டாகப் பிரிக்கப்படுகின்றது. இதற்கு வீடுகள் என்று பெயர். மேற்கத்திய நாடுகளில் வட்ட வடிவில் இந்த் ஓரை வட்டம் அமைக்கப்பெறுகிறது. ஆனால் இந்து சோதிட முறையில் இவை கட்டங்களாக அமைக்கப்பெறுகின்றன. அதற்கு பனையோலையில் வட்டத்தினை விட கோடுகளாக வரைதல எளிதாக இருந்ததே காரணம்.[1][2][3]

பன்னிரு இராசி அல்லது ஓரைகள்

  1. மேழம்
  2. விடை
  3. ஆடவை அல்லது இரட்டை
  4. கடகம்
  5. மடங்கல்
  6. கன்னி
  7. துலை
  8. நளி
  9. சிலை
  10. சுறவம்
  11. கும்பம்
  12. மீனம்

நவக் கிரகங்கள்

தென்னிந்திய முறையில் வரையப் பட்டுள்ள இராசிச் சக்கரம்
  1. சூரிய தேவன்
  2. சந்திர தேவன்
  3. செவ்வாய்
  4. புதன் அல்லது அறிவன்கோள்
  5. குரு அல்லது வியாழன் கோள்
  6. சுக்ரன் அல்லது வெள்ளிக்கோள்
  7. சனி அல்லது காரிக்கோள்
  8. இராகு ((நிழல் கோள்)(தொன்மம்)
  9. கேது (நிழல் கோள்) (தொன்மம்)

வீடுகள்

வட இந்திய முறையில் வரையப் பட்டுள்ள ஓரை வட்டம்

இருபத்தியேழு விண்மீன்கள்

  1. அஸ்வினி (பரி அல்லது புரவி)
  2. பரணி (அடுப்பு)
  3. கார்த்திகை (அறுமீன்)
  4. ரோகிணி (உருள்)
  5. மிருகசிரீடம் (மான் தலை)
  6. திருவாதிரை (யாழ் அல்லது ஆதிரை)
  7. புனர்பூசம் (இரட்டை மீன்)
  8. பூசம் (அலவன் அல்லது நளி)
  9. ஆயில்யம் (அரவு)
  10. மகம் (பல்லக்கு அல்லது அரியணை)
  11. பூரம் (கட்டில் இருகால்கள்)
  12. உத்திரம் (கட்டில் நாற்கால்கள்)
  13. அத்தம் (அங்கை)
  14. சித்திரை (அருமணி அல்லது முத்து)
  15. சுவாதி (வாள் அல்லது ஒற்றைப்புல்)
  16. விசாகம் (ஆரைக்கால்)
  17. அனுஷம் (நண்டு அல்லது தாமரை)
  18. கேட்டை (காதணி)
  19. மூலம் (வேர்க்கட்டு)
  20. பூராடம் (முறம்)
  21. உத்தராடம் (மருப்பு அல்லது கட்டில் பலகை)
  22. திருவோணம் (செவி)
  23. அவிட்டம் (முரசு)
  24. சதயம் (வட்டம்)
  25. பூரட்டாதி (காலடிகள்)
  26. உத்திரட்டாதி (இரட்டையர்)
  27. ரேவதி (மீன்)

ஜோதிடத்தில் 12 இராசிகளின் அதிபதிகள்

1 மேஷம் (செவ்வாய்)

2 ரிஷபம் (சுக்ரன்)

3 மிதுனம் (புதன்)

4 கடகம் (சந்திரன்)

5 சிம்மம் ( சூரியன்)

6 கன்னி (புதன்)

7 துலாம் ( சுக்ரன்)

8 விருச்சகம் ( செவ்வாய்)

9 தனுசு (குரு)

10 மகரம் ( சனி)

11 கும்பம் ( சனி)

12) மீனம் ( குரு )

நவகிரகங்களின் உச்ச நீச வீடுகள்

1) சூரியன் - உச்ச வீடு: மேஷம், நீச வீடு: துலாம்

2) சந்திரன் - உச்ச வீடு: ரிஷபம், நீச வீடு: விருச்சகம்

3) செவ்வாய் - உச்ச வீடு: மகரம், நீச வீடு: கடகம்

4) புதன் - உச்ச வீடு: கன்னி, நீச வீடு: மீனம்

5) குரு - உச்ச வீடு: கடகம், நீச வீடு: மகரம்

6) சுக்ரன் - உச்ச வீடு: மீனம், நீச வீடு: கன்னி

7) சனி - உச்ச வீடு: துலாம், நீச வீடு: மேஷம்

8) ராகு: இவர்கள் நிழல் கோள்கள் என்பதால் உச்ச, நீச வீடுகள் கிடையாது.

9) கேது: இவர்கள் நிழல் கோள்கள் என்பதால் உச்ச, நீச வீடுகள் கிடையாது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  1. "zodiac". Oxford Dictionaries. Oxford University Press. Archived from the original on 26 September 2016. Retrieved 19 September 2017.
  2. Because the signs are each 30° in longitude but constellations have irregular shapes, and because of precession, they do not correspond exactly to the boundaries of the constellations after which they are named.
  3. Noble, William (1902), "Papers communicated to the Association. The Signs of the Zodiac.", Journal of the British Astronomical Association, 12: 242–244, Bibcode:1902JBAA...12..242N
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya