பேராக் சுல்தான் நசுரின் சா
சுல்தான் நசுரின் சா அல்லது பேராக் சுல்தான் நசுரின் சா; (ஆங்கிலம்: Nazrin Shah of Perak அல்லது Sultan Nazrin Muizzuddin Shah; மலாய்: Sultan Nazrin Muizzuddin Shah Ibni Almarhum Sultan Azlan Muhibbuddin Shah Al-Maghfur-Lah); (பிறப்பு: 27 நவம்பர் 1956); பேராக் மாநிலத்தின் சுல்தான் ஆவார். அத்துடன் டிசம்பர் 2016 முதல் மலேசியாவின் துணை பேரரசர் பொறுப்பையும் வகிக்கின்றார்.[1][2] சுல்தான் நசுரின் சா, ஜொகூர் சுல்தான் துங்கு இசுமாயில் இட்ரிசு (ஜொகூர் பட்டத்து இளவரசர்) அவர்களின் உறவினரும் ஆவார். ஏனெனில் இருவரும் பேராக் சுல்தான் இட்ரிசு சா I என்பவரின் வழிமுறையினர் ஆகும். அத்துடன் சுல்தான் நசுரின் சா, பேராக் சுல்தானகத்தின் 35-ஆவது சுல்தானும் ஆவார். தொடக்க கால வாழ்க்கைசுல்தான் நசுரின் சா 1956-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி, அப்போதைய மலாயாவின் பினாங்கு மாநிலத்தின் ஜார்ஜ் டவுன் நகரில் அவரின் தாத்தா அல்மர்கும் சுல்தான் யூசுப் இசுதின் சா ஆட்சியின் போது பிறந்தார். அவர் பேராக்கின் சுல்தான் பேராக் சுல்தான் அசுலான் சா (Sultan Azlan Muhibbuddin Shah) மற்றும் பேராக் அரசியார் துவாங்கு பைனுன் பிந்தி முகமது அலி (Tuanku Bainun Binti Mohd Ali) ஆகியோரின் மூத்த மகன் ஆவார். கல்வி வாழ்க்கைசுல்தான் நசுரின் சா 1962 முதல் 1967 வரை கோலாலம்பூர் குவாந்தான் சாலை தொடக்கநிலைப் பள்ளியில் (Sekolah Rendah Jalan Kuantan, Kuala Lumpur) தன் தொடக்கக் கல்வியைப் படித்தார். பின்னர் கோலாலம்பூர் செயின்ட் ஜான் கல்வி நிலையத்தில் 1968 முதல் 1970 வரை பயின்றார். அதன் பின்னர் 1975-ஆம் ஆண்டு வரையில் ஐக்கிய இராச்சியம் இலண்டன் மாநகரின் கேம்பிரிட்ச் லேய் கல்விக்கழகத்தில் (The Leys School) ஆறாவது படிவம் பயின்றார். ஆர்வர்டு பல்கலைக்கழகம்ஆக்சுபோர்டு வொர்செஸ்டர் கல்லூரியில் (Worcester College), தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்; ஆர்வர்டு பல்கலைக்கழகம் ஜான் எப். கென்னடி அரசுப் பள்ளியில் (John F. Kennedy School of Government) அரசியல் பொது நிர்வாகத்தில் முதுகலை பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். மலேசிய அரசியலமைப்பு, முடியாட்சியின் பங்கு, கல்வி, இசுலாம், இன உறவுகள் மற்றும் பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் கட்டுரைகளை எழுதியுள்ளார். 1993—ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்தின் கிரான்பீல்ட் தொழில்நுடபக் கல்விக்கழகத்தில் வணிக நிர்வாகத்தின் கௌரவ முதுநிலைப் பட்டம்; 1999-இல் ஜப்பான் சோகா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்திற்கான கௌரவ டாக்டர் பட்டம்; மற்றும் 2016-இல் நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. விருதுகள்வழங்கப்பட்ட விருதுகள்: பேராக் விருதுகள்
மலேசிய விருதுகள்
கெளரவ பட்டங்கள்
சிறப்புகள்பல இடங்களுக்கு இவரின் பெயரிடப்பட்டுள்ளது:
மேற்கோள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia