பேராக் சுல்தான் அசுலான் சா Sultan Nazrin Muizzuddin Shah ibni Almarhum Sultan Azlan Muhibbuddin Shah Al-Maghfur-Lah
தாய்
துவாங்கு பைனுன் பிந்தி முகமது அலி
பேராக் சுல்தான் (ஆங்கிலம்: Sultan of Perak; மலாய்: Sultan Perak; சீனம்: 霹雳州苏丹; ஜாவி: سلطان ڤيراق) என்பவர் பேராக் மாநிலத்தின் ஆளும் அரசராகவும், மாநிலத்தின் தலைவராகவும், இசுலாமிய மதத்தின் தலைவராகவும் சேவை செய்யும் தலைமை அரச ஆளுநராகும். பேராக் சுல்தான்களின் வம்சாவளியைச் சார்ந்த பேராக் சுல்தானகம் என்பது மலாய் மாநிலங்களில் உள்ள பழமையான அரச பரம்பரைகளில் ஒன்றாகும்.[1][2]
1511-இல் போர்த்துகீசிய தாக்குதல்களால் மலாக்கா சுல்தானகம் வீழ்ச்சி அடைந்த போது, சுல்தான் மகமுட் சா எனும் மலாக்கா சுல்தான், ரியாவு தீவுகளில் இருந்த கம்பார் பகுதிக்கு பின்வாங்கி 1528-இல் காலமானார். அவருக்கு ராஜா அலி எனும் அலாவுதீன் ரியாட் ஷா II, ராஜா முசாபர் சா மற்றும் ராஜா அகமது எனும் மூன்று மகன்கள் இருந்தனர்.
மலாக்கா சுல்தானகம்
மூத்தவரான ராஜா அலி எனும் அலாவுதீன் ரியாட் ஷா II, ஜொகூர் சுல்தானகத்தை (பழைய ஜொகூர் சுல்தானகம்) நிறுவினார். இரண்டாவது மகன் பேராக் மாநிலத்தை ஆட்சி செய்ய அழைக்கப்பட்டார். இவர் பேராக் சுல்தானிய வம்சத்தின் முதல் சுல்தான் ஆனார்.
பழைய ஜொகூர் சுல்தானகத்தை ஆட்சி செய்து வந்த சுல்தான் மகமூத், தளபதி மெகாட் செரி ராமா என்பவரால் 1699-இல் படுகொலை செய்யப்பட்டார். அதன் மூலம், பேராக் மாநிலம் தவிர மற்ற மலாய் மாநிலங்களில் மலாக்கா சுல்தானகத்தின் வாரிசுகளின் ஆட்சி முடிவுக்கு வந்தது.[3]
மற்ற மலாய் சுல்தானகங்களுக்கு மாறாக, பேராக் ஆளும் வம்சம் சற்றே சிக்கலான வாரிசு முறையைப் பயன்படுத்துகிறது. தற்போதைய முறைமையில், ஓர் ஆளும் சுல்தான், சில உயர் இளவரசர் பட்டங்களுக்கு ஆண்களை (இளவரசர்கள்) நியமிக்கிறார். அந்த நியமனங்கள் அரியணைக்கான வாரிசு வரிசையில்; முன்னுரிமையின் தகுதியில் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
25 பிப்ரவரி 1953-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வரிசைமுறை மற்றும் அதற்கான வாரிசு தகுதிகள் பின்வருமாறு:
Duli Yang Teramat Mulia Raja Muda Perak Darul Ridzuan ராஜா ஜபார்
Raja Di-Hilir ராஜா டி ஈலிர் பேராக்
Duli Yang Amat Mulia Raja DiHilir Perak Darul Ridzuan ராஜா இசுகந்தர் சுல்கர்னாயின்
Raja Kechil Besar ராஜா கெச்சில் பெசார்
Yang Teramat Mulia Raja Kecil Besar Perak Darul Ridzuan ராஜா அசுலான் முசபர் சா
Raja Kechil Sulung ராஜா கெச்சில் சூலோங்
Yang Teramat Mulia Raja Kecil Sulong Perak Darul Ridzuan ராஜா அகமது நசீம் சா
Raja Kechil Tengah ராஜா கெச்சில் தெங்கா
Yang Teramat Mulia Raja Kecil Tengah Perak Darul Ridzuan ராஜா டத்தோ ஸ்ரீ இசுகந்தர்
Raja Kechil Bongsu ராஜா கெச்சில் பொங்சு
Yang Teramat Mulia Raja Kecil Bongsu Perak Darul Ridzuan காலி
இளவரசர் பட்டங்களை வைத்திருப்பவர்கள் பொதுவாக உறுதிபடுத்தப்பட்ட திறமையின்மை அல்லது இயலாமையின் காரணங்களினால் அவர்களின் பதவிகள் நீக்கம் செய்யப்படலாம். ஏற்கனவே பட்டத் தகுதிகள் உள்ளவர்களுக்கு மரணம் ஏற்பட்டால் அல்லது பதவி உயர்வு வழங்கப்பட்டால், அவருக்கு அடுத்தபடியாக மூத்த பட்டத்தை வைத்திருப்பவர் அடுத்த தகுதிக்கு தகுதி உயர்த்தப்படுவார்.
ராஜா மூடா என்பது வெளிப்படையான வாரிசு ஆகும். மற்றும் ராஜா மூடாவின் மறைவுக்குப் பிறகு ராஜா ஈலிர் என்ற பட்டத்தை வைத்திருக்கும் இளவரசர் புதிய ராஜா மூடா ஆகிறார். இதற்குப் பின்னர் ராஜா கெச்சில் பெசார் எனும் தகுதி; ராஜா ஈலிர் தகுதியாக மாறுகிறது. இந்த வாரிசுகளால் காலியாகும் மற்ற பதவிகளுக்கு புதிய சுல்தான் தன் சொந்த வேட்பாளரை நியமிக்கலாம்.[சான்று தேவை]
மலாக்கா வம்சாவளி சுல்தான்கள்
பேராக்கில் மலாக்கா வம்சாவளி சுல்தான்கள்
எண்
பெயர்
காலம்
1
பேராக் சுல்தான் முசபர் சா I (Muzaffar Shah I of Perak)
1528–1549
2
பேராக் சுல்தான் மன்சூர் சா I (Mansur Shah of Perak)
1549–1577
3
பேராக் சுல்தான் தஜுடின் சா (Ahmad Tajuddin Shah of Perak)
1577–1584
4
பேராக் சுல்தான் தாஜுல் அரிபின் சா I (Tajul Ariffin Shah of Perak)
1584–1594
5
பேராக் சுல்தான் அலாவுதின் சா (Alauddin Shah of Perak)
1594–1603
6
பேராக் சுல்தான் முக்காடாம் சா (Mukaddam Shah of Perak)
1603–1619
7
பேராக் சுல்தான் மன்சூர் சா II (Mansur Shah II of Perak)
1619–1627
8
பேராக் சுல்தான் மகமுட் சா I (Mahmud Shah I of Perak)
1627–1630
9
பேராக் சுல்தான் சலாவுதின் சா (Salehuddin of Perak)