மகாராஷ்டிர வரலாறுமகாராட்டிர வரலாறு தோராயமாக கி.மு 4 ஆம் நூற்றாண்டு காலகட்டம்வரை தெரியவருகிறது. கி.மு 4 ஆம் நூற்றாண்டு முதல் 875 வரையிலான காலகட்டம்வரை இப்பகுதியில் மகாராஸ்திரி பிராகிருதம் மொழியின் மேலாதிக்கம் கொண்ட மொழிகளின் ஆதிக்கத்தில் இருந்தன. இந்த மகாராஸ்திரி பிராகிரத்தில் இருந்தே மராத்தி மொழி ஒன்பதாம் நூற்றாண்டுக்கு மேல் உருவானது. மராத்தி மொழியின் பழமையான கல்வெட்டு தற்கால கர்நாடகத்தில் உள்ள சரவணபெலகுலாவில் உள்ள பாகுபளி சிலையின் அடிப்பகுதியில் உள்ளது. காலப்போக்கில், மகாராட்டிரா என்ற பகுதியாக அபரண்டா, விதர்பா, முலாக், அஷ்மக் அஸ்மகம், குந்தால் ஆகிய பகுதிகளும் அடங்கின. மேலும் நாகா, முண்டா மற்றும் பில் மக்கள் போன்ற பழங்குடி சமூகங்கள் வாழ்ந்த இப்பகுதி பண்டைய காலங்த்தில், தண்டகாரண்யம் என அழைக்கப்பட்டது. கி.மு 4 ஆம் நூற்றாண்டு-கி,பி 12 ஆம் நூற்றண்டு காலகட்ட மகாராட்டிரம்![]() இன்றைய மகாராஷ்டிர பகுதி முதல் ஆயிரம் ஆண்டுகளில் பல பேரரசுகளின் ஆட்சிக்குட்பட்ட ஒரு பகுதியாக இருந்தது. இப்பகுதியை ஏறக்குறைய எட்டு நூற்றாண்டு காலத்தில் ஆண்ட பேரரசுகள் மவுரிய பேரரசு, சாதவாகனர், வாகாடகப் பேரரசு, சாளுக்கியர், இராஷ்டிரகூடர் ஆகியோராவர். மேலும் இந்தப் பேரரசுகள் இந்திய துணைக்கண்டத்துக்குள் பெரும் நிலப்பரப்பில் ஆட்சி செலுத்தின. இந்தப் பேர்ரசுகளின் காலத்தில் மகாராட்டிரத்தில் அஜந்தா, எல்லோரா குகைகள் போன்ற மிக பெரிய சில கலைச் சின்னங்கள் உருவாக்கப்பட்டன. மகாராட்டிர நிலப்பகுதி கி.மு நான்கு மற்றும் மூன்றாம் நூற்றாண்டுகளில் மௌரிய பேரரசால் ஆளப்பட்டது. ஏறக்குறைய கி.பி 230 காலகட்டத்தில் மகாராட்டிரம் சாதவாகனப் பேரரசின் ஆட்சியின் கீழ் வந்தது, 400 ஆண்டுகள் ஆளப்பட்டது.[1] சாதவாகனர்களில் சிறந்த ஆட்சியாளர் கௌதமிபுத்ர சதகர்ணி ஆவார். இந்த ஆட்சியாளர்கள் சிதியர்களால் வெற்றிகொள்ளப்பட்டனர். வாகாடகப் பேரரசு கி.பி 250–470 வரை ஆட்சி செய்தது. சாதவாகன மரபினர் தங்கள் ஆட்சியின் போது மகாராஸ்திரி பிராகிருதம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளை ஆட்சி மொழிகளாக பயன்படுத்தினர். வாகாடப் பேரரசின்போது ஆட்சி மொழிகளாக சமசுகிருதம், மகாரஸ்திரி பிராகிருதம் ஆகிய மொழிகள் இருந்தன. பிரவரபுரம்-நந்திவர்தனா கிளை: பிரவரபுரம்-நந்திவர்தனா கிளை ஆட்சியாளர்கள் வர்தா மாவட்டத்தில் உள்ள பிரவரபுரம் (பவுனார்) மற்றும் நாக்பூர் மாவட்டத்தின் மன்சார் மற்றும் நந்திவர்தன் (நாகர்தான்) போன்ற பல்வாறு தளங்களில் இருந்து ஆட்சி செய்தனர். இந்த கிளையினர் குப்தர்களுடன் திருமண உறவு கொண்டிருந்தனர். வத்சகுல்மா கிளை:வத்சகுல்மா கிளையை நிறுவியவர் முதலாம் பர்வரசேனாவின் மகனான இரண்டாம் சர்வசேனா ஆவார், இவர் தனது தந்தையின் மரணத்திற்கு பிறகு இக்கிளையை தோற்றுவித்தார். மன்னர் சர்வசேனா தனது தலைநகராக வத்சகுல்மா நகரை உருவாக்கினார். இது தற்கால மகாராட்டிரத்தின் வாஷிம் மாவட்டத்தில் உள்ள வாஷிம் நகரமாகும். இந்தக் கிளையின் ஆட்சிப்பகுதி சகயாத்ரி வட்டாரம் மற்றும் கோதாவரி ஆறு ஆகியவற்றுக்கு இடைப்பட்டப் பகுதியில் இருந்தது. இவர்களால் அஜந்தாவிலுள்ள புத்தமத குகைகள் சில அமைக்கப்பட்டன. சாளுக்கிய பேரரசர்கள் மகாராட்டிரத்தை கி.பி 6 ஆம் நூற்றாண்டு முதல் 8 ஆம் நூற்றாண்டுவரையிலான காலகட்டம்வரை ஆண்டனர். மற்றும் இந்த மரபின் இரண்டாம் புலிகேசி, வட இந்தியாவின் இரண்டு பேரரசர்களான ஹர்ஷவர்தனர் மற்றும் இரண்டாம் விக்ரமாதித்தன் ஆகிய இருவரை போரில் தோற்கடித்தார். மேலும் 8 ஆம் நூற்றாண்டில் அரபு ஆக்கிரமிப்பாளைர்களையும் தோற்கடித்தார். இராஷ்டிரகூடர் மகாராட்டிரத்தை 8 ஆம் நூற்றாண்டு முதல் 10 ஆம் நூற்றாண்டுவரை ஆண்டனர்.[2] அரபு பயணியான சலைமான் ராட்டிரகூட மன்னனான அமோகவர்சனை "உலகின் தலைசிறந்த 4 மன்னர்களில் ஒருவர்" என்றார்.[3] சாளுக்கிய் பேரரசு மற்றும் இராட்டிரக்கூடப் பேரரசு ஆகிய இரு அரசுகளும் தங்கள் தலைநகரத்தை தற்கால கர்நாடகத்தில் கொண்டிருந்தன. இவர்கள் தங்கள் அரசவை மொழயாக கன்னடம் மற்றும் சமசுகிருதம் ஆகியவற்றை கொண்டிருந்தனர். 11 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து 12 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் தக்காண பீடபூமியில் சோழப் பேரரசு மற்றும் மேலைச் சாளுக்கிய மரபினர் ஆதிக்கம் செய்தனர்.[4] தக்காணத்தில் மேலைச் சாளுக்கிய மன்னர்கள் மற்றும் சோழ மன்னர்கள் முதலாம் இராஜராஜ சோழன், இராசேந்திர சோழன், மற்றும் இரண்டாம் ஜெயசிம்மன், முதலாம் சோமேசுவரன், ஆறாம் விக்கிரமாதித்தன் ஆகியோருக்கிடையே பல போர்கள் நடந்தன. சேயுனா யாதவப் பேரரசு 12வது-14வது நூற்றாண்டுதேவகிரி யாதவப் பேரரசு என்பது ஒரு இந்திய அரச மரபாகும், இந்த பேரரசு அதன் உச்ச நிலையில் துங்கபத்திரை ஆறு, நருமதை ஆறுகள்வரை பரவி, தற்கால மகாராட்டிரம், வட கர்நாடகம், மத்தியப் பிரதேசத்தின் ஒரு பகுதி என பரவி இருந்தது. இதன் தலைநகராக தேவகிரி (தற்கால மகாராட்டிரத்தின் தவுளதாபாத்) இருந்தது. இவர்கள் துவக்கத்தில் மேலைச் சாளுக்கியர் கீழ் சிற்றரசர்களாக இருந்தனர்.[5] இந்த மரபை தோற்றுவித்தவர் சுபாகு என்பவரின் மகனான திருதபிரகாரா என்பவராவார். இவரின் தலைநகராக ஸ்ரீநகரம் இருந்தது. என்றாலும், ஒரு துவக்கக்கால கல்வெட்டு சந்ராதித்யபுரம் (தற்கால நாசிக் மாவட்டத்தின் சந்தூர்) இவர்களின் தலைநகராக குறிப்பிடுகிறது.[6] சேயுனா என்ற பெயர் திருதபிரகாராவின் மகனான, சேயுனாசந்த்ராவின் பெயரில் இருந்து தோன்றியது, இவர்கள் அடிப்படையில் ஆண்ட பகுதி சேயுனாதேசம் (தற்கால கந்த்திஷ்) என அழைக்கப்பட்டது. இம்மரபின் பிற்கால ஆட்சியாளரான இரண்டாம் பீமன், பரமாரப் பேரரசின் மன்னானான முன்ஜா மற்றும் இரண்டாம் தைலப்பனுக்கும் நடந்த போரில் தைலப்பனுக்கு உதவினார். ஆறாம் விக்கிரமாதித்தன் தன் அரியனையை பெற இரண்டாம் சேயுனாசந்திரன் உதவினார். 12 ஆம் நூற்றாண்டின் இடையில், சாளுக்கியரின் ஆற்றல் குறையத் துவங்கியது, இதனால் இவர்கள் தங்கள் சுயாட்சியை அறிவித்தனர். இவர்களின் ஆட்சி இரண்டாம் சிங்கானாவின் காலத்தில் உச்சம் பெற்றது. தேவகிரி யாதவர்கள் மராத்தி மொழியை ஆதரித்தனர். தங்கள் அரசவை மொழியாகவும் பயன்படுத்தினர்.[7] கன்னட மொழியும் அரசவை மொழியாக சியுனாசந்த்திராவின் ஆட்சிக்காலத்தில் இருந்திருக்கலாம், ஆனால் இராமச்ந்திரா மற்றும் மகாதேவ யாதவர் காலத்தில் மராத்தி மொழி மட்டுமே அரசவை மொழியாக இருந்தது. யாதவர்களின் தலைநகரான தேவகிரி மராத்தி கற்ற அறிஞர்களை ஈர்க்கும் ஒரு காந்தமாக இருந்தது. அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் இடமாகவும், திறமைகளுக்கான ஆதரவை பெறும் இடமாகவும் இருந்தது. இவர்களின் காலத்தில் மராத்திய இலக்கியங்கள் தோன்றவும், வளர்ச்சியடையவும் யாதவ ஆட்சி உதவியது.[8] பேராசிரியர். ஜியார்ஜ் மோர்ஸ்,[9] வி. கே. ராஜ்வாடி, சி.வி.வைத்யா, டாக்டர். ஏ.எஸ். அல்தீகர், டாக்டர். டி.ஆர். பண்டர்கர், ஜே. துன்கான் என். டிர்ரிட்,[10] போன்ற வரலாற்று அறிஞர்களின் கூற்றின்படி சேயுனு மரபினர் மராத்தா மரபினர் என்றும் இவர்கள் மராத்திய மொழியை ஆதரித்தனர்.[11] திகம்பர் பாலகிருஷ்ண மோகாஷி என்பவர் யாதவ ஆட்சி "முதல் உண்மையான மராட்டிய சாம்ராஜ்ஜியமாக தெரிகிறது" என்று குறிப்பிட்டுகிறார்.[12] தனது புத்தகமான மத்தியகால இந்தியா என்ற நூலில், சி.வி. வைத்தியா யாதவர்கள் " தூய மராத்தா சத்திரியர்" கூறுகிறார். முஸ்லீம்கள் ஆட்சி14 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், யாதவப் பேரரசு, தற்போதைய மகாராட்டிரத்தின் பெரும்பாலான பகுதிகளை ஆட்சி செய்தது. இந்நிலையில் இவர்கள் தில்லி சுல்தானக ஆட்சியாளர் அலாவுதின் கில்ஜியால் அகற்றப்பட்டனர். பிறகு, முகமதுபின் துக்லக்கால் தக்காணத்தின் ஒரு பகுதி கைபற்றப்பட்டது, மேலும் தனது தலைநகரை தற்காலிகமாக தில்லியிலிருந்து மகாராட்ரிரத்தின் தௌலதாபாத்திற்கு மாற்றினார். 1347 இல் துக்லக்குகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, குல்பர்காவின் உள்ளூர் பாமினி சுல்தான்கள் அடுத்த 150 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.[13] 1518 இல் பாமினி சுல்தானகம் உடைந்த பிறகு, மகாராட்டிர பிராந்தியம் ஐந்து தக்காண சுல்தானகங்களானது அவை; அகமத்நகர் நிசாம், பீஜாபூர் அதில்ஷா, கோல்கொண்டா குயிட்புஷ், பிதர் பிதர்ஷான், இலிச்பூர் இம்தீஷ் போன்றவை ஆகும்.[14] இந்த அரசுகள் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டு வந்தனர். இவர்கள் ஒன்றிணைந்து தெற்கிலுள்ள விஜயநகரப் பேரரசை 1565 இல் வீழ்த்தினர்.[15] தற்கால மும்பை பகுதி 1535 இல் போர்ச்சுக்கல்லால் கைபற்றப்படும் வரை குசராத் சுல்தான்களால் ஆளப்பட்டு வந்தது, கந்தீஷ் பகுதி 1382 மற்றும் 1601 க்கு இடைப்பட்டக் காலத்தில் ஃபரூக் மரபினராலா ஆளப்பட்டு வந்தது இப்பகுதி பின்னர் முகலாயப் பேரரசால் இணைத்துக் கொள்ளப்பட்டது. அகமது நகரின் நிஜாம்ஷாஹி வம்சத்தின் பிரதிநிதியாக 1607 இருந்து 1626 வரை[16] இருந்தவர் மாலிக் அம்பார் முர்டாஸா நிஸாம் ஷாவின் பலம் மற்றும் அதிகாரத்தை அதிகரிக்கும்வதமாக ஒரு பெரிய இராணுவப் படையை உருவாக்கினார். மாலிக் அம்பார் தக்காணப் பகுதியில் கொரில்லா யுத்த ஆதரவாளராக இருந்தார். மாலிக் அம்பார் உதவியுடன் முகலாய இளவரசர் குர்ராம் (பின்னர் ஷாஜஹான் ஆனார்) தன்னை ஆட்சிக்கு வரவிடாமல் தன் மருமகனை தில்லி அரியணையில் அமர்த்த முயற்சி மேற்கொண்ட அவருடைய மாற்றந்தாய், நூர்ஜஹானுக்கு, எதிராக வெற்றிபெற்று அரியனையைக் கைப்பற்றினார்.[17] தக்காண அரசாட்சியானது 17 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியின் இறுதியில் முகலாயப் பேரரசிடமிருந்து மராத்தா படைகளால் வென்றெடுக்கப்பட்டது. சிவாஜியின் மேல் நம்பிக்கை வைத்து அவர் வழி சென்ற மராத்தி மக்கள் துன்புறுத்தலுக்கு ஆளாயினர். இது மராட்டிய சாம்ராஜ்ஜியத்தின் விதியில் திருப்புமுனைப் புள்ளிகளில் ஒன்றாக ஆனது. இஸ்லாமிய ஆட்சியின் துவக்கக் காலத்தில் முஸ்லிம் அல்லாதவர்களின், கோவில் இடிப்பு மற்றும் கட்டாய மதமாற்றம், ஜிசியா வரி விதிப்பு போன்ற அட்டூழியங்கள் காணப்பட்டன. எனினும், இந்து மத மக்களின் பெரும்பான்மையினால் காலப்போக்கில் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அவர்களுடன் ஒத்துப்போக முன் வந்தனர். பெரும்பாலும் கணக்கு வழக்குப் பணிகள் பிராமணர்களிடம் ஒப்படைக்கப்பட்டது அதேசமயம் பட்டில்கி என்னும் வருவாய் வசூல் (கிராம அளவில் வருவாய் வசூல்) மற்றும் தேஷ்முக் என்னும் வரிவசூல் (ஒரு பெரிய பகுதிக்கு வருவாய் வசூல்) போன்ற பொறுப்புகள் வாடன் (பரம்பரை உரிமைகளாக) மராட்டியர்கள் கைகளில் இருந்தது. இத்தகைய வரிவசூல் பணிகளில் போஸ்லே, ஷிர்கே, கோர்பாண்டே, ஜாதவ், மஹாதிக், காட்ஜி என பல குடும்பங்கள் விசுவாசத்தோடு வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு சுல்தான்களிடம் பணியாற்றினார். வரிவசூலில் இருந்த வாடன் என்னும் பரம்பரை உரிமையாளர்கள் தங்கள் வாடன் பதவியில் கிடைக்கும் பொருளாதார சக்தி மற்றும் தங்களின் பெருமைக்கு ஆதாரமாக இது இருப்பதாக கருதினர். இதன் காரணமாக தங்கள் பொருளாதார நலன்களைக் காக்க சிவாஜியை ஆதரிக்கத் தயங்கி எதிர்த்தனர்.[14] மக்களிடையே பெரும்பான்மையாக இந்து மதம் இருந்தது மற்றும்,பெரும்பான்மையானோர் மராத்தி பேசினார், இதனால் இப்ராஹிம் அடில்ஷா போன்ற சுல்தான்கள் அரசவை மொழியாகவும், நிர்வாக மொழியாகவும், ஆவண மொழியாகவும் மராத்தி மொழியை ஏற்றுக் கொண்டனர்..,[14][18][19] மராத்தியப் பேரரசு![]() மராத்தியர் இந்தியத் துணைக்கண்டத்தில் 17 ஆம் நூற்றாண்டின் நடுவில் இருந்து 19 ஆம் நூற்றாண்டின் துவக்கம்வரை அவர்களின் மராத்தியப் பேரரசினால் ஆதிக்கம் செய்தனர். இங்கே மராட்டியர் என்பது விரிவான பொருளில் பயன்படுத்தப்படுகிறது மராட்டிய பேரரசின் நிறுவனரான சிவாஜி, அனைத்து மராத்திய மொழி பேசும் சமூக மக்களையும் அதே பெயரில் தனித்துவமான ஒரு சமூகமாக ஒன்றிணைத்தார். சிவாஜிசிவாஜி நவீன மராட்டிய தேசத்தின் நிறுவனராக கருதப்படுகிறார். சிவாஜி போன்ஸ்லே (பிறப்பு 1627/1630 [20] - 3 ஏப்ரல் 1680), மேலும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் என்று அறியப்படும், போஸ்லே ராஜ்புத் மராட்டிய மரபினர் ஆவார். சிவாஜியால் மராட்டிய சாம்ராஜ்ஜியம் உருவாக்கப்பட்டது, இவர் செல்வாக்கு சரிந்துவந்த பிஜப்பூர் அடில்ஷாஹியின் சுல்தானிடம் இருந்து ஒரு பகுதியைக் கைப்பற்றினார். . 1674 ஆம் ஆண்டில், அவர் முறையாக சத்ரபதி என்ற பட்டத்துடன் ராய்காட்டில் முடிசூட்டப்பட்டார். சிவாஜி ஒரு சிறந்த வீரராவார் போராளி இவர் தன் அரசுக்கு உதவியாக மண்டலா என்னம் அமைச்சரவையில், வெளி விவகாரத்துறை, உள்நாட்டு உளவுத்துறை போன்ற நவீன கருத்துக்களுடன் அமைத்திருந்தார். மேலும் இவர் சிறப்பான பொது மற்றும் இராணுவ நிர்வாகத்தையும் ஏற்படுத்தினார். சக்திவாய்ந்த கடற்படையை உருவாக்கி, சிந்துதுர்க் போன்ற கோட்டைகளை அமைத்தது மட்டுமல்லாமல் மகாராஷ்டிராவின் மேற்கு கடற்கரையில் விஜயதுர்க் போன்ற பழைய கோட்டைகளையும் வலிமைப்படுத்தினார். முதலாம் சாஹூ ஆட்சியின் கீழ் மராத்திய செல்வாக்கு1707 இல் அவ்ரங்கசீப்பின் மரணத்துக்குப் பின் மராட்டியர்களுக்கு எதிராக நடந்த 27 ஆண்டுகால போர் முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. மராத்தா, பாத் குடும்ப பேஷ்வாக்களின் தலைமையின் கீழ், விரைவில் அதிகார வெற்றிடம் நிரப்பப்பட, அடுத்து வந்த தசாப்தங்களில் துணைக்கண்டத்தின் பெரும்பாலான பகுதியை கைப்பற்றினார். பேஷ்வாக்கள் காலம் (1749 முதல் 1818 வரை)ஒரு காலகட்டத்தில், பேஷ்வாக்கள் என்னும், (பட்) தேஷ்முக் மராத்தி சித்பவன் பிராம்மணர் குடும்பத்தை சேர்ந்தவர்களின் கட்டுப்பாட்டில், மராத்திய இராணுவம் 1749 முதல் 1818 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வந்தது.[21] பின்னர் இவர்களின் பரம்பரையே மராத்திய பேரரசின் தலைமைப் பொறுப்பில் இருந்தது. இவர்கள் காலத்தின் போது, மராட்டிய சாம்ராஜ்ஜியம் அதன் உச்சநிலையாக 1760 இல் இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பாலான ஆளும் நிலையை அடைந்தது.[22] மராத்திய பிரதேசத்தில் பேஷ்வா கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகள் 1818 இல் கிழக்கு இந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டுக்கள் வந்தன.[23] மராத்திய கடற்படைமராட்டியர்கள் ஒரு வலிமையான கடற்படையை உருவாக்கினர். ஏறத்தாழ 1660 களில் வளர்ச்சியுற்று அதன் உச்சக்கட்டத்தில், இந்தியாவின் மேற்கு கடற்கரையில் மும்பையில் இருந்து சவந்த்வாடி வரையிலான கடல் எல்லைக்குள் ஆதிக்கம் செலுத்தியது.[24] இது பிரித்தானியர், போர்த்துகீசியம்,டச்சு, சிட்டி போன்ற கடற்படை கப்பல்களை தாக்கி அவர்களின் கடற்படை அபிலாசைகளின் மீது குறிவைத்தன. மராட்டிய கடற்படை 1730 ஐ சுற்றிய காலம் வரை ஆதிக்கம் செலுத்தியது, 1770 களில் சரிவு நிலையை அடைந்து, 1818 இல் முடிவுக்கு வந்தது.[25] பிரித்தானியரின் கீழ் மகாராட்டிரம் மற்றும் விடுதலை இயக்கம்பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி 18 ஆம் நூற்றாண்டில் மெல்ல தன் ஆட்சிப்பரப்பை விரிவாக்கியது. மகாராட்டிரம் மூன்றாவது ஆங்கில-மராட்டியப் போரில் பேஷ்வா இரண்டாம் பாஜிராவின் தோல்வியுடன் 1818 இல் கைப்பற்றப்பட்டது. பால கங்காதர திலகர் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய பங்கு வகித்தார். இவர் பரவலாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவராக மற்றும் தலைவராக ஏற்கபட்டிருந்தார். இவர் ஒரு தீவிரவாத அணுகுமுறையாளராக இருந்தார் மேலும் இவர் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற இந்திய வெகுஜன மக்களை ஊக்குவிக்கும் கருவியாக இருந்ததார்.
டாக்டர் .பி. ஆர். அம்பேத்கர், இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், இந்தியாவில், பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டுக் கொண்டிருந்த குறைந்த எண்ணிக்கைக்கொண்ட தலித் மக்களை, ஒடுக்கும் சாதிகளை எதிர்த்து போராடினார். இவர் ஒடுக்கப்படும் தலித் வகுப்புகளுக்கு தலைமை ஏற்று நடத்தி தலித் இயக்கம் காண வழிவகுத்ததார். அம்பேத்கர் இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை எழுதுவதில் வகித்த முக்கிய பங்குக்காக அவர் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் தந்தை என்று கருதப்படுகிறார். பிரித்தானிய அரசுக்கு இறுதி எச்சரிக்கையாக 1942 ஆம் ஆண்டு "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தை மும்பையில் துவக்கப்பட்டது, 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்தது. மகாராட்டிரத்தில் பலர் தலைவர்கள் இந்த விடுதலைப் போராட்டத்தில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தனர். 1937 இல் மும்மொழி பம்பாய் மாகாணத்தின் முதல் முதலமைச்சராக பி.ஜி.கெர் பொறுப்பேற்றார். ![]() மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டம் 1956மராத்தி மக்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய அடிலாபாத், மேடக், நிஜாமாபாத் ஆகிய வட்டங்களும், மகாபூபங்கர் மாவட்டம் போன்றவை தெலுங்கு மாநிலம் (தற்போதைய தெலங்கானா) மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களுடன் 1956 இல் இணைக்கப்பட்டன. இன்று கூட இந்த பகுதிகளில் உள்ள பழைய நகரங்களின் பெயர்கள் மராத்தி மொழி பெயர்களாகவே உள்ளன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia