மங்களூர் விரைவு தொடருந்து
'சென்னை எக்மோர்- மங்களூர் சென்ட்ரல் மங்களூர் விரைவு தொடருந்து' என்பது தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை நகரத்தின் கர்நாடக மாநிலத்தில் மங்களூரு நகரத்தையும் கேரள மாநிலம் வழியாக இணைக்கும் தெற்கு ரயில்வே துறையினரால் வகையில் இயக்கப்படும் தொடருந்து சேவை ஆகும். சென்னை, விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, கரூர், ஈரோடு, கோயம்புத்தூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மற்றும் மங்களூர் என தென்னிந்தியாவின் பல முக்கியமான நகரங்களை இணைக்கும் வகையில் இந்த தொடருந்து இயக்கப்படுகிறது. வரலாறு2003 2004 ரயில்வே நிதிநிலை அறிக்கையில், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை எக்மோர் நிலையத்திலிருந்து ஈரோடு சந்திப்பு நிலையம் வரை திருச்சிராப்பள்ளி சந்திப்பு வழியாக தினந்தோறும் இயக்கப்படும் தொடருந்தாக அறிமுகப்படுத்தப்பட்டது.[2] அதன்படி 6607 மற்றும் 6608 என்ற எண்களில் இயங்கிவந்த இந்த தொடருந்து தொடருந்து இந்த தொடருந்து தொடருந்து இயங்கிவந்த இந்த தொடருந்து தொடருந்து, 2005 2006 ரயில்வே நிதிநிலை அறிக்கையின் படி கோயம்புத்தூர் சந்திப்பு நிலையம் வரை நீட்டிக்கப்பட்டது.[3] கரூர் போண்ற மாவட்டங்களில் இருந்து மேல்மருவத்தூர் கோவிலுக்கு யாத்திரையாக செல்லும் பயணிகள் பலரும் இந்த தொடருந்து சேவையினால் பயனடைந்தனர். ஆனால் 2007 ஆம் ஆண்டு சென்னை முதல் கோயம்புத்தூர் வரை இயக்கப்பட்டு வந்த இந்த தொடருந்து முன்பதிவு ஒதுக்கீடு குறைக்கப்படும் என்று பயணிகளின் பயத்தையும் மீறி மங்களூர் வரை நீட்டிக்கப்பட்டது.[4][5] இதனால் 6867 மற்றும் 6868 என்ற எண்களில் இயங்கிவந்த திருச்சிராப்பள்ளி மங்களூரு விரைவு தொடருந்து, ரயில்வே நிர்வாகத்தினரால் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் பயண நேரம் மாற்றப்பட்டு இயக்கப்பட்டது.[6] 6607 மற்றும் 6608 என்ற எண்களின் கீழ் இயக்கப்பட்டு வந்த சென்னை எக்மோர் - மங்களூர் சென்ட்ரல் விரைவு தொடருந்து 2008ஆம் ஆண்டிலிருந்து 6107 மற்றும் 6108 என்ற எண்களாக மாற்றப்பட்டு இயக்கப்பட்டது.[7] பின்னர் இந்திய ரயில்வே துறையினரால் 2010ஆம் 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்திலக்க எண்களால் அறியப்படும் முறையின் கீழ் அனைத்து தொடருந்துகளின் எண்களும் மாற்றப்பட்ட போது இந்தத் தொடருந்தின் எண்களும் 6107 மற்றும் 6108 என்ற எண்களில் இருந்து 16107 மற்றும் 16108 என மாற்றப்பட்டு இயங்கி வந்தது.[8][9] மறுபடியும் 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்த தொடருந்தின் எண்கள் மாற்றப்பட்டு 16859 மற்றும் 16860 என்ற எண்களில் தற்போது இயங்கி வருகிறது.[10] வழித்தடம் மற்றும் நிறுத்தங்கள்தினந்தோறும் இயக்கப்படும் இந்த தொடருந்து 16859 என்ற எண்ணில் சென்னை எக்மோர் நிலையத்தில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 04.45 மணிக்கு திருச்சிராப்பள்ளி சந்திப்பு நிலையத்தை அடைகிறது.[11] அங்கு இழுவை இயந்திரம் மாற்றப்பட்டு 52 நிறுத்தங்களைக் கடந்து மங்களூரு நிலையத்தை இரவு 10.15 மணிக்கு வந்தடைகிறது.[12] மறுமார்க்கமாக 16860 என்ற எண்ணில் இயக்கப்படும் தொடருந்து மங்களூரு நிலையத்திலிருந்து காலை 06.45 மணிக்கு புறப்படும் இந்த தொடருந்து இரவு 09.50 மணிக்கு திருச்சிராப்பள்ளி [13] சந்திப்பு நிலையத்தை அடைகிறது. அங்கே இழுவை இயந்திரம் மாற்றப்பட்டு சென்னை எக்மோர் நிலையத்தை மறுநாள் காலை 04.10 மணிக்கு வந்தடைகிறது.[14][a] தாம்பரம், செங்கல்பட்டு ,மேல்மருவத்தூர்மேல்மருவத்தூர், விழுப்புரம் சந்திப்பு, விருத்தாசலம் சந்திப்பு,அரியலூர் திருச்சிராப்பள்ளி சந்திப்பு, கரூர் சந்திப்பு, ஈரோடு சந்திப்பு, திருப்பூர், கோயம்புத்தூர் சந்திப்பு, பாலக்காடு சந்திப்பு, ஷோரனூர் சந்திப்பு, திரூர், பரப்பணன்குடி,கோழிக்கோடு, வடக்கரா, மகி, கண்ணூர் மற்றும் காசர்கோடு.> போன்றவை இந்த தொடருந்து பயணிக்கும் சில முக்கியமான நிறுத்தங்களாகும். பயணப் பெட்டிகளின் வடிவமைப்புமுதலாம் வகுப்பு மற்றும் ஈரடுக்கு இணைந்த குளிர்சாதன பெட்டி ஒன்று, மூன்றடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் மூன்று, முன்பதிவு மற்றும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் பதினொன்று, உட்காரும் வசதி கொண்ட இரண்டு பெட்டிகள், பொது பெட்டிகள் நான்கு (முன்பதிவில்லாதவை), சரக்கு பெட்டிகள் இரண்டு என மொத்தம் 23 பெட்டிகளைக் கொண்ட இந்த தொடர்ந்து கீழ்க்கண்ட வரிசையில் வரிசையில் கீழ்க்கண்ட வரிசையில் வரிசையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.[b]
வண்டி எண் 16859'மங்களூர் விரைவு தொடருந்து வண்டியானது சென்னை எக்மோர் நிலையத்திலிருந்து ஒவ்வொரு நாளும் இரவு 11.15 மணிக்கு இயக்கப்பட்டு தாம்பரம்,செங்கல்பட்டு ,மேல்மருவத்தூர், விழுப்புரம் சந்திப்பு, விருத்தாசலம் சந்திப்பு, அரியலூர், திருச்சிராப்பள்ளி சந்திப்பு, கரூர் சந்திப்பு, ஈரோடு சந்திப்பு, திருப்பூர்,கோயம்புத்தூர் சந்திப்பு, பாலக்காடு சந்திப்பு, ஷோரனூர் சந்திப்பு, திரூர், பரப்பணன்குடி, கோழிக்கோடு, வடக்கரா, மகி, கண்ணூர் மற்றும் காசர்கோடு என 53 நிலையங்களை மணிக்கு 46 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 23மணி நேரங்களில் மங்களூர் நிலையத்தை மறுநாள் இரவு 10.15 மணிக்கு சென்றடைகிறது. இதன் மொத்த பயண தூரம் 980 கிலோ மீட்டர் ஆகும். பயணங்களுக்கு இடையே அதிகபட்சமாக மணிக்கு 102 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. இந்த தொடருந்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி தெற்கு ரெயில்வேயினால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும்.[15] வண்டி எண் 16860மறுமார்க்கமாக 16860 என்ற எண்ணைக் கொண்ட இந்த தொடருந்து வண்டியானது மங்களூர் நிலையத்திலிருந்து ஒவ்வொரு நாளும் காலை 06.45 மணிக்கு இயக்கப்பட்டு ஐம்பத்தி ஒரு நிறுத்தங்களைக் கடக்க மணிக்கு 46 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 21 மணி 25 நிமிடங்களில் சென்னை எக்மோர் நிலையத்தை மறுநாள் காலை 04.10 மணிக்கு சென்றடைகிறது. இதன் மொத்த பயண தூரம் 986 கிலோ மீட்டர் ஆகும். கரூர் சந்திப்பு முதல் திருச்சிராப்பள்ளி சந்திப்பு வரை அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோமீட்டர் வரை இயக்கப்படுகிறது. இந்த தொடருந்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி தென்மேற்கு ரெயில்வேயினால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும்.[16] மேற்கோள்கள்
குறிப்புகள் |
Portal di Ensiklopedia Dunia