விருத்தாச்சலம் சந்திப்பு தொடருந்து நிலையம்
விருத்தாச்சலம் சந்திப்பு தொடருந்து நிலையம் (Vriddhachalam Junction railway station, நிலையக் குறியீடு:VRI) இந்தியாவின் தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். வரலாறு
தென்னிந்திய இரயில்வே நிறுவனம் ஆனது 1880 ஆம் ஆண்டில் சென்னையிலிருந்து தூத்துக்குடி வரை 715 கி.மீ. (444 மைல்) தொலைவில், மீட்டர்கேஜ் பாதை அமைத்தது.[1] சென்னை எழும்பூர் - தாம்பரம் - விழுப்புரம் - திருச்சி - திண்டுக்கல் - மதுரை ஆகிய வழித்தடம் மீட்டர் கேஜிலிருந்து, அகலப்பாதையாக மாற்றப்பட்டு, அகலப்பாதை தொடருந்து மூலம் மார்ச் 2001இல் போக்குவரத்து தொடங்கப்பட்டது.[2] மின்மயமாக்கல்விழுப்புரம் - திருச்சிராப்பள்ளி வரை உள்ள அகலப்பாதையானது, 2010இல் மின்மயமாக்கப்பட்டது.[3] தென்தமிழகத்திற்கு செல்லும் பெரும்பாலான இரயில்கள் இந்த நிலையத்தில் நிற்கின்றன என்ற போதிலும், இந்த நிலையம் ஒரு 'பி' தரத்தை கொண்ட நிலையமாகும். திட்டங்கள் மற்றும் மேம்பாடுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.[4][5][6][7][8] அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி தொடருந்து கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, விருத்தாச்சலம் சந்திப்பு தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 9.17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[9][10][11][12][13] நிலையத்தின் முன்புறமுள்ள சாலைப் பணிகள், பயணிகளை ஆட்டோ, டாக்ஸி ஏற்றி இறக்கி செல்லும் பகுதி, வாகன நிறுத்துமிடங்கள், பாதசாரி நடைபாதைகள், பயணிகளின் நடைபாதை மற்றும் வசதியை மேம்படுத்துதல், புதிய பயணச்சீட்டு முன்பதிவு நிலையங்கள் மற்றும் காத்திருப்பு அரங்குகள் மற்றும் விஐபி லாஞ்ச் கட்டப்படும். மேம்படுத்தப்பட்ட தரைத்தளம், இருக்கை மற்றும் கழிப்பறை வசதிகளும் கட்டப்படும், ரயில் நிலைய இருக்கைகள், குடிநீர் வசதிகள் மற்றும் அழகியல் தன்மையுள்ள தங்குமிடங்கள் ஆகியவை பயணிகளுக்கு வசதியான மற்றும் இனிமையான அனுபவத்தை உறுதி செய்யும் வண்ணம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. நுழைவுப்பகுதியானது மாற்றுத்திறனாளிகள் எளிதில் அனுகும் வண்ணம் நன்கு வடிவமைக்கப்பட்ட சரிவுப் பாதைகளாக அமைக்கப்படும். பயணிகளுக்கு அத்தியாவசிய பயணத் தகவல்களை வழங்க நிலைய வளாகத்தில் புதிய எல்இடியிலான அறிவிப்பு பலகைகள் அமைக்கப்படும். நிலையத்தின் கட்டிடங்கள் முழுவதும் எல்.ஈ.டி விளக்குகள் பயன்படுத்தப்படும், ஒருங்கிணைந்த பயணிகள் தகவல் அமைப்பு செயல்படுத்தப்படும். ரயில் அட்டவணைகள், பிளாட்பார மாற்றங்கள் மற்றும் பிற முக்கியமான பயணத் தகவல்கள் பற்றிய நிகழ்நேர புதுப்பிப்புகளை வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளபடுகின்றன.[14] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia