மலேசிய மனிதவள அமைச்சு (மலாய்: Kementerian Sumber Manusia; ஆங்கிலம்: Ministry of Human Resources) (MOHR) என்பது மலேசியாவில் மனிதவள வளங்களை நிர்வகிக்கும் மற்றும் மேம்படுத்தும் அமைச்சு ஆகும். இந்த அமைச்சின் தலைமையகம் புத்ராஜெயா (Putrajaya) கூட்டரசு அரசாங்க நிர்வாக மையத்தில் (Federal Government Administrative Centre) உள்ளது.
வேலைகளுக்கு விண்ணப்பம் செய்யும் மலேசியர்களுக்குப் பொருத்தமான வேலைகளைத் தேடி வழங்குவதில் முன்னணி வகிக்கும் இந்த அமைச்சு; தொழிற்சங்கங்கள் (Trade Unions), தொழில்துறை உறவுகள் (Industrial Relations), சமூக பாதுகாப்பு (Social Security) ஆகிய முக்கியமான பொறுப்புகளுக்கு முதலிடம் வழங்குகிறது.[3]
பொறுப்பு துறைகள்
தொழிற்சங்கங்கள் (Trade Unions)
திறன் மேம்பாடு (Skills Development)
உடல் உழைப்பு (Manual Labour)
தொழில்துறை உறவுகள் (Industrial Relations)
சமூக பாதுகாப்பு (Social Security)
தொழில் மற்றும் உடல்நலப் பாதுகாப்பு (Occupational Safety and Health)
தொழில்துறை நீதிமன்றம் (Industrial Court)
தொழில்துறை நீதிமன்றம் (Labour Economics)
தொழிலாளர் சந்தை தகவல் மற்றும் பகுப்பாய்வு (Labour Market Information and Analysis)
அமைப்பு
மனிதவள அமைச்சர்
மனிதவள துணை அமைச்சர்
பொது செயலாளர்
பொதுச்செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
சட்டப் பிரிவு (Legal Advisor Office)
உள் தணிக்கை பிரிவு (Internal Audit Division)
நிறுமத் தொடர்பு பிரிவு (Corporate Communication Unit)
சிறப்புச் செயல்நிறைவு காட்டி பிரிவு (Key Performance Indicator Unit)
ஒழுங்கமைவு பிரிவு (Integrity Unit)
துணை பொதுச் செயலாளர் (கொள்கை மற்றும் பன்னாடு)
கொள்கைப் பிரிவு (Policy Division)
தொழிலாளர் சந்தை தகவல் மற்றும் பகுப்பாய்வு நிறுவனம் (Institute of Labour Market Information and Analysis)
பன்னாட்டுப் பிரிவு (International Division)
தேசிய ஊதிய ஆலோசனை மன்றம் (National Wages Consultative Council
துணைப் பொதுச் செயலாளர் (செயல்பாடுகள்)
வளர்ச்சி, நிதி மற்றும் மனித வளப் பிரிவு (Development, Financial and Human Resources Division)
மேலாண்மை சேவைகள் பிரிவு (Management Services Division)
கணக்கு பிரிவு (Account Division)
தகவல் மேலாண்மை பிரிவு (Information Management Division)
ஆய்நர் மற்றும் அமலாக்கப் பிரிவு (Inspectorate and Enforcement Division)