ஓ. என். கிருஷ்ண குறுப்பு, கே. இலட்சுமிகுட்டி அம்மா
வாழ்க்கைத் துணை
சரோஜினி
பிள்ளைகள்
ராஜீவன், மாயாதேவி
ஒற்றப்பிலாவில் நீலகண்டன் வேலு குறுப்பு (மலையாளம்: ഒറ്റപ്ലാവില് നീലകണ്ഠന് വേലു കുറുപ്പ്, 27 மே 1931 – 13 பெப்ரவரி 2016[1]) இந்தியாவின்கேரளாவைச் சேர்ந்த ஓர் புகழ்பெற்ற மலையாளக் கவிஞர், இலக்கியவாதி மற்றும் திரைப்படப் பாடலாசிரியர். 2007ஆம் ஆண்டிற்கான உயரிய இலக்கிய விருதான ஞான பீட விருது பெற்றவர் [2]. 20க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். அவரது உஜ்ஜயினி, ஸ்வயம்வரம் ஆகிய பாடல் தொகுப்புகள் மிகவும் பிரபலமானவை. சமூக தத்துவார்த்தப் பாடல்களில் இவர் மிகவும் பிரபலமானவர். கேரள சாகித்ய அகாதெமி விருது, சாகித்திய அகாதமி விருது, வயலார் விருது, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.2007ஆம் ஆண்டு கேரளப் பல்கலைக்கழகத்திடமிருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
ஓ.என்.வி என்று பரவலாக அறியப்படும் இவர் இடதுசாரி சிந்தனையாளர்[3] . 1989ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் இடது சனநாயக முன்னணியின் சார்பாகப் போட்டியிட்டார்.[4]