முலு மலை
முலு மலை (மலாய் மொழி: Gunung Mulu; ஆங்கிலம்: Mount Mulu) என்பது மலேசியாவில் உள்ள மலைகளில் நான்காவது உயர்ந்த மலையாகும். மலேசியா, சரவாக், மிரி பிரிவில் உள்ள இந்த மலையின் உயரம் 2,376 மீட்டர் (7,795 அடி). இது சரவாக் மாநிலத்தில் மூருட்டு மலைக்குப் பிறகு இரண்டாவது உயரமான மலையாகும். முலு மலை தேசியப் பூங்கா எல்லைக்குள் அமைந்துள்ளதால், இந்த மலைக்கும் அந்தப் பூங்காவின் பெயரிடப்பட்டது. வரலாறுமுலு மலையில் ஏறுவதற்கான முதல் முயற்சி 19-ஆம் நூற்றாண்டில், இசுபென்சர் செயின்ட் ஜான் மற்றும் சார்லசு ஓஸ் என்பவர்களால் மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் முதல் முயற்சி தோல்வி கண்டது. 1920-களில் தான், தாமா நிலோங் என்ற பெரவான் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த காண்டாமிருக வேட்டைக்காரர், முலு மலையின் அருகே தென்மேற்கு முகடுகளைக் கண்டுபிடித்தார். அந்த முகடு மலையின் உச்சிக்குக் கொண்டு சென்றது. 1932-ஆம் ஆண்டில், தாமா நிலோங் எனும் சரவாக் பழங்குடியினர், லார்ட் செக்லெட்டன் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பயணக் குழுவினரையும் முலு மலையின் உச்சிக்குக் கொண்டு சென்றார்.[1] ஏறும் பாதைமுலு மலையின் சிகரத்தை அடைவதற்கு ஒரே ஒரு வழித்தடம்தான் உள்ளது.[1] மலையின் சிகரம் முலு மலை தேசியப் பூங்கா தலைமையகத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த வழித்தடம் முலு மலை தேசிய பூங்கா தலைமையகத்தில் இருந்து முகாம் 3-ஐ சென்றடையும். இந்த முகாம் 12 கி.மீ. தொலைவில், 1,200 மீட்டர் உயரத்தில் முதன்மைக் காடுகளில் உள்ளது. பாசி படர்ந்த காடுகள் முகாம் 3-இல் இருந்து தொடங்குகிறது. முகாம் 4 -ஐ அடைய சில மணி நேரங்கள் பிடிக்கும். முகாம் 4-க்குப் பிறகு, சில செங்குத்தான ஏற்றங்களைக்க் காண நேரிடும். அதன் பின்னர் மலையின் சிகரத்தைத் தொடலாம். முலு மலையின் உச்சியில் இருந்து இறங்கும் வழித்டத்தில் முகாம் 1 அமைந்துள்ளது. முகாம் 1-இல் இருந்து தேசியப் பூங்கா தலைமையகத்தைச் சென்றடைய மேலும் 3 மணி நேரம் பிடிக்கும்.[2] பல்லுயிர்கள்முலு மலையின் க் கற்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மலைச் சிகரங்கள் பல தனித்துவமான தாவரங்களைக் கொண்டுள்ளன. அத்துடன் அழிந்து வரும் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் தாயகமாகவும் விளங்குகிறது.[1] முலு மலையானது தாழ்நிலக் காட்டுத் தாவரங்களில் (Dipterocarpaceae) இருந்து மலைத்தொடர் தாவரங்கள் (Montane Vegetations) வரையிலான உயிரியல் அமைப்புகளைக் கொண்டுள்ளது. இந்த மலை அதன் தாவரக் குடுவைகளின் பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்றது. முலு மலையில் ஐந்து வகையான தாவரக் குடுவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.[3] இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia