பாகெலாலான்
பாகெலாலான் (மலாய் மொழி: Ba'kelalan; ஆங்கிலம்: Ba'kelalan) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் லிம்பாங் பிரிவு, லாவாஸ் மாவட்டத்தில் உள்ள ஒன்பது கிராமங்களின் குழுமமாகும். இந்தக் கிராமக் குழுமம் மலிகான் பீட பூமியில் (Maligan Highlands); கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,000 அடி (910 மீ) உயரத்தில் உள்ளது. இந்தோனேசியா கலிமந்தான் எல்லையில் இருந்து 4 கி.மீ. தொலைவிலும்; சரவாக் லாவாஸ் நகரத்தில் இருந்து 150 கி.மீ. தொலைவிலும் உள்ளது.[2] பாகெலாலானில் ஒன்பது கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் உள்ள மக்கள் அனைவரும் லுன் பாவாங் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். பொதுபாகெலாலான் எனும் பெயர் கெலாலான் நதியின் (Kelalan River) பெயரில் இருந்து உருவானது. ’பா’ எனும் முன்சொல் லுன் பவாங் மொழியில் ஈரமான நிலங்கள் என்று பொருள். இரண்டும் சேர்ந்து பாகெலாலான் என்று ஓர் இடத்தின் பெயரானாது.[3] குளிர்ந்த மலைக் காலநிலையில், இங்கு ஆப்பிள், மாண்டரின் ஆரஞ்சு போன்ற பழ மரங்கள் வளர்க்கப் படுகின்றன. இங்கு அரிசியும் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் மலை உப்பு அருகிலுள்ள மலைகளில் இருந்து கிடைக்கிறது. இந்தப் பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் கிறிஸ்தவ இனத்தைச் சேர்ந்தவர்கள்.[3][4] நிர்வாக அமைப்புமலிகான் மலைப் பகுதியில் அமைந்துள்ள பாகெலாலான் ஒன்பது கிராமங்கள்:[5]
ஒரு கிராமம் என்பது தனித்தனி வீடுகளின் தொகுப்பாகும். ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு தலைவர் இருக்கிறார். அரசாங்க நியமனத்தால் தலைவர் பதவி உருவாக்கப்படுகிறது. அவருக்கு மாதச் சம்பளம் வழங்கப்படுகிறது. ஒரு தலைவர் கிராமத்தின் பொதுவான விவகாரங்களைக் கையாள வேண்டும். மற்றும் ஒன்பது கிராமங்களின் விவகாரங்களை மேற்பார்வையிட ஒரு பிராந்திய தலைவர் அல்லது பெங்குலு உள்ளார். கிராம மக்களின் மேம்பாடு மற்றும் பூர்வீக மக்களின் வழக்குகளைக் கையாள்வது; இவை போன்ற விசயங்களைப் பற்றி விவாதிக்க அவர் வருடத்திற்கு இரண்டு முறை வருவார்.[6] பாகெலாலான் வானூர்தி நிலையம்பாகெலாலானில் ஒரு வானூர்தி நிலையம் உள்ளது. அதன் பெயர் பாகெலாலான் வானூர்தி நிலையம். 19 இருக்கைகள் கொண்ட சிறிய விமானங்கள் பயன்படுத்தப் படுகின்றன. பாகெலாலான் வயல் காடுகள்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia