பாலே ஆறு
பாலே ஆறு (மலாய்: Sungai Balleh; ஆங்கிலம்: Balleh River); மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள ஓர் ஆறு ஆகும். ராஜாங் ஆற்றுடன், சிபு மாவட்டப் பகுதியில் பாலே ஆறு கலக்கிறது.[1] ராஜாங் ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாக உள்ளது. பாலே ஆற்றங்கரைகளில் காட்டு மரங்களை வெட்டும் முகாம்கள் பலவற்றைக் காணலாம்; மற்றும் புதிய நீள வீடுகளையும் காணலாம். சரவாக் அரசாங்கத்தால் காட்டுமரம் வெட்டுதல் கட்டுப் படுத்தப்படுகிறது. அத்துடன் அவர்கள் தீவிரமான மறு நடவு திட்டத்தையும் கொண்டுள்ளது. நாகமுஜோங் கிராமம்சரவாக்கின் பல கிராமப்புற மாவட்டங்களுக்குப் பயணம் செய்வதற்கான முதன்மைப் பாதையாக, பாலே ஆறு இன்றும் பயன்படுத்தப்படுகிறது.[2] பல்லே ஆற்றில் நாகமுஜோங் கிராமம் (Nagamujong Village) ஒரு முக்கியக் கிராமமாக அறியப்படுகிறது. அந்தக் கிராமத்தில் நீள வீடுகள், ஒரு தொடக்கப் பள்ளி, ஒரு மருத்துவமனை, ஒரு தேவாலயம்; மற்றும் காட்டு மரங்களை வெட்டும் முகாம்கள் உள்ளன.[3] நாகமுஜோங் கிராமத்தின் உட்பகுதி காடுகளில் உள்ள சுரங்கங்களில் இருந்து இந்தக் கிராமத்தின் படகுத் துறைக்கு நிலக்கரி கொண்டு வரப்படுகிறது. மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia