பாராம் ஆறு
பாராம் ஆறு (மலாய்: Sungai Baram; ஆங்கிலம்: Baram River; Indonesian: Sungai Baram; சீன மொழி: 巴兰河) என்பது போர்னியோ, கிழக்கு மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள ஒரு முக்கியமான ஆறு ஆகும். இந்த ஆறு மலேசியாவின் கெலாபிட் உயர்நிலங்கள் (Kelabit Highlands); இந்தோனேசியாவின் கிழக்கு கலிமந்தான் (East Kalimantan) இரான் மலை (Iran Mountains) பகுதியில் உருவாகிறது. அத்துடன் மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் ஓர் இயற்கையான எல்லையாகவும் அமைகிறது.[3] பொதுஇந்த ஆறு மேற்கு நோக்கி வெப்பமண்டல மழைக்காடுகள் வழியாகச் சென்று தென் சீனக் கடலில் கலக்கிறது. பாராம் ஆற்றின் கழிமுகம்; கிழக்கு பாராம் கழிமுகம் (East Baram Delta) என்றும் மேற்கு பாராம் கழிமுகம் (West Baram Delta) என்றும் இரண்டு அலகுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.[4][5] 1882-ஆம் ஆண்டில் அப்போதைய புரூணை சுல்தான் அப்துல் மோமின் (Sultan Abdul Momin) என்பவர் சரவாக்கின் வெள்ளை இராசா (White Rajah) ஜேம்சு புரூக்கிற்கு பாராம் நதிப் படுகையை (Baram River Basin) வழங்கி இருக்கிறார். 10,000 சதுர மைல்கள் (30,000 km2) பரப்பளவு கொண்ட பாராம் ஆற்றுப் படுகை அப்போது புரூணை சுல்தானகத்தின் ஒரு பகுதியாக இருந்தது.[6] மிரி-பாராம் நெடுஞ்சாலைஜேம்சு புரூக் ஆண்டுக்கு 6000 டாலர்களை ஆண்டு நிதியாக புரூணை சுல்தானுக்கு செலுத்த வேண்டும் எனும் உடன்படிக்கையின் கீழ் கொடுக்கப்பட்டது. அப்போது இருந்து பாராம் ஆற்றுப் படுகை, சரவாக்கின் நிலப்பகுதியாக இருந்து வருகிறது. 2003-ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட மிரி-பாராம் நெடுஞ்சாலையில் (Miri-Baram Highway) பத்தாங் பாராம் பாலம் (Batang Baram Bridge) எனும் நீண்ட பாலம் உள்ளது. மலேசியக் கூட்டரசு சாலை 22 இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia