மூலோபாயப் படைகளுக்கான கட்டளையகம், இந்தியா
மூலோபாயப் படைகளுக்கான கட்டளையகம் (SFC), இதனை மூலோபாய அணு ஆயுதக் கட்டளையகம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் தலைவர் மூத்த இராணுவத் தளபதி ஆவார். இது இந்திய அணுசக்தி கட்டளை ஆணையத்தின் (NCA) கீழ் செயல்படுகிறது. இதன் தற்போதைய கட்டளைத் தலைவர் வைஸ் அட்மிரல் சூரஜ் பெர்ரி ஆவார். தந்திரோபாய மற்றும் மூலோபாய அணு ஆயுதக் களஞ்சியத்தின் மேலாண்மை மற்றும் நிர்வாகத்திற்கு இந்த அமைப்பு பொறுப்பாகும்.[2] இது 4 சனவரி 2003 அன்று இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாச்பாய் அரசால் உருவாக்கப்பட்டது.[3] இதன் முதல் தலைவர் ஏர் மார்ஷல் தேஜா மோகன் அஸ்தானா ஆவார்.[4][5] பொறுப்புமூன்று நட்சத்திர தகுதியுடன் கூடிய இராணுவப் படைத்தலைவரின் கீழ் இந்திய அணுசக்தி கட்டளை ஆணையத்தின் ஆணைகளை நிறைவேற்றுவது மூலோபாயப் படைகள் கட்டளையகத்தின் பொறுப்பாகும். இந்திய அணுசக்தி கட்டளை ஆணையத்திடமிருந்து வெளிப்படையான ஒப்புதலைப் பெற்ற பிறகு, அணு ஆயுதங்கள் மற்றும் போர்க்கப்பல்களை வழங்கும் செயல்முறையைத் தொடங்கும் முழுப் பொறுப்பையும் இந்த அமைப்பு கொண்டுள்ளது. NCAவின் முறையான ஒப்புதலுடன், இலக்கு பகுதியின் சரியான தேர்வு SFCஆல் அளவீடு செய்யப்பட்ட, முடிவெடுக்கும் பல்வேறு நிலைகளை உள்ளடக்கிய ஒட்டுமொத்த செயல்பாட்டின் மூலம் முடிவு செய்யப்படும்.[4][5] அணுசக்தி ஆயுதங்கள் மற்றும் சக்தி மிக்க ஏவுகணைகள் மீது முழுமையான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டை இவ்வமைப்பு கொண்டிருப்பதன் மூலம் அனைத்து மூலோபாய சக்திகளையும் SFC நிர்வகிக்கிறது. மேலும் தேவையான பணிகளை நிறைவேற்ற தேவையான அனைத்து தற்செயல் திட்டங்களையும் உருவாக்குகிறது. SFC இன் கட்டளை, கட்டுப்பாடு மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் உறுதியாக நிறுவப்பட்டுள்ளது. மேலும் கட்டளையகத்தின் செயல்பாட்டுத் தயார்நிலை உயர்நிலையை அடைந்துள்ளது.[6] இந்திய வான்படையின் குண்டு வீச்சு விமானங்கள் மற்றும இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் செலுத்தப்படும் அணு ஆயுதங்கள் மற்றும் அக்னி ஏவுகணைகள், பிரித்வி ஏவுகணைகள், சூரியா தாக்குகணைகள் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணைகளை கையாள்வதற்கு இந்த அமைப்பே பொறுப்பாகும். இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia