மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனம்
28°34′16″N 77°08′59″E / 28.5712°N 77.1496°E மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனம் (Manohar Parrikar Institute for Defence Studies and Analyses (சுருக்கமாக:MP-IDSA), இந்தியாவின் பன்னாட்டு உறவுகள், குறிப்பாக பாதுகாப்பு மற்றும் மூலோபாய விஷயங்களில் மேம்பட்ட ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ஒரு இந்திய சிந்தனைக் குழு அமைப்பாகும் இந்த அமைப்பு இந்திய அரசாங்கத்தின் பொதுமக்கள், இராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கிறது. இது பாரபட்சமற்றது மற்றும் தன்னாட்சி பெற்ற நிறுவனம். இந்நிறுவனத்திற்கு இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம் நிதியுதவி வழங்குகிறது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்வதன் மூலமும், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பரந்த பொதுமக்களிடையே அறிவைப் பரப்புவதன் மூலமும் தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.[1][2] இவ்வமைப்பின் தற்போதைய தலைமை இயக்குநர் வெளியுறவு அமைச்சகத்தின் முன்னாள் தூதுவர் சுஜன் ஆர். சினாய் ஆவார். இவை இவ்வமைப்பின் தலைமை இயக்குநராக 3 சனவரி 2019 அன்று பொறுப்பேற்றார். இதன் தலைமை இயக்குநர் உள்ளிட்ட பிற உறுப்பினர்கள் இந்தியப் பிரதமர் தலைமையிலான நியமனத்திற்கான அமைச்சரவைக் குழுவால் நியமனம் பெற்றவர்கள். வரலாறு![]() பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனம் 11 நவம்பர் 1965 அன்று தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்டது. இது இந்தியாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.[1] மறைந்த பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் நினைவாக இந்நிறுவனத்திற்கு பிப்ரவரி 2020 ஆம் ஆண்டில் மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[3] ஆளுகைமனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற ஆளுமைகளைக் கொண்ட ஒரு நிர்வாகக் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. மேலும் இது ஒரு தலைமை இயக்குநர் தலைமையில் இயங்குகிறது. இந்நிறுவனத்தின் பணியின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய குழுக்களால் ஆதரிக்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் இரண்டு ஆண்டு காலத்திற்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மரபுப்படி இதன் நிர்வாகக் குழுவின் தலைவராக பாதுகாப்பு அமைச்சர் தலைமை தாங்குவார். செயல்பாடுகள்ஆராய்ச்சிஇந்த நிறுவனத்தின் தற்போதைய ஆராய்ச்சிப் பகுதிகள் பின்வரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: தெற்காசியா, கிழக்கு ஆசியா, ருசியா மற்றும் மத்திய ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா, இராணுவ விவகாரங்கள், மனித பாதுகாப்பு, பேரழிவு ஆயுதங்கள், மற்றும் பயங்கரவாதம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு ஆகும். இந்த நிறுவனம் கல்வி, பாதுகாப்பு, வெளியுறவு, ஊடகம் மற்றும் பிற சிவில் சேவைகளில் இருந்து பெறப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட புகழ்பெற்ற சிந்தனையாளர்களைக் கொண்ட வலுவான ஆராய்ச்சி பீடத்தைக் கொண்டுள்ளது. தலைநகர் புது தில்லியில் உள்ள இதன் மையத்தில் அமைந்துள்ள அதிநவீன நூலகம் கொள்கை வகுப்பாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.[4] பயிற்சிஇந்த நிறுவனம் இந்திய குடிமைப் பணியின் பல்வேறு பிரிவுகளிலிருந்து, அதாவது இந்திய ஆட்சிப் பணி, இந்திய வெளியுறவுப் பணி, இந்தியக் காவல் பணி, இந்தியப் பாதுகாப்புப் படைகள் மற்றும் இந்தியத் துணை இராணுவப் படைகள்களிலிருந்து பெறப்பட்ட மூத்த அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி மற்றும் புத்தாக்கப் படிப்புகளை வழங்குகிறது. சர்வதேச தொடர்புகள்மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனம் பல்வேறு வழிகளில் சர்வதேச தொடர்புகளைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் சர்வதேச கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளை நடத்துகிறது. பத்திரிகைகளை வெளியிடுகிறது. நிறுவனத்திற்கு வருகை தரும் சிந்தனையாளர்களை வரவேற்கிறது. மேலும் உலகம் முழுவதிலுமிருந்து வரும் நிறுவனங்களுடன் உறவுகளைக் கொண்டுள்ளது. அரசு கொள்கைஇந்திய அரசாங்கத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை வடிவமைப்பதில் இந்நிறுவனம் முக்கியப்பங்கு வகிக்கிறது. எடுத்துக்காட்டாக; இந்திய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு நிலைக்குழு உறுப்பினர்களுக்கு இந்நிறுவனத்தின் நிபுணர்கள் அழைத்து இந்தியப் பாதுகாப்பு குறித்து கூட்டங்கள் நடத்துகிறது[5]. இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் கொள்கை முன்னோக்கைப் பெறுவதற்காக இரண்டு ஆண்டுகள் வரை இந்த நிறுவனத்தில் செலவிட வருகிறார்கள். இந்த நிறுவனத்தின் ஆண்டு அறிக்கை இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.[6] வெளியீடுகள்இந்த நிறுவனத்தின் Strategic Analysis எனும் இதழ் இருமாதத்திற்கு ஒருமுறை வெளியிடப்படுகிறது. இது தேசிய மற்றும் சர்வதேச கருப்பொருள்களில் இந்திய மூலோபாய சிந்தனையைப் பற்றிய புரிதலை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.[7] பிற வெளியீடுகள்:
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia