இராணுவப் பொறியாளர் சேவைகள் (இந்தியா)
இராணுவப் பொறியாளர் சேவைகள் (Military Engineer Services (MES), இது இராணுவம் மற்றும் பொதுமக்கள் இணைந்த சேவை ஆகும். பொறியியல் அதிகாரிகள் மற்றும் சார்-நிலை அலுவலர்கள் கொண்ட இப்படையானது இந்தியாவின் பழைமையான மற்றும் பெரிய இந்திய அரசின் அமைப்பாகும். இந்தியாவின் முப்படைகளுக்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளவும், பராமரிக்கவும் உள்ள இப்பொறியாளர்கள் படையானது 26 செப்டம்பர் 1923 அன்று பிரித்தானிய இந்தியாவின் அரசால் நிறுவப்பட்டது.[1][1] இதன் தலைமைப் பொறியாளர் லெப். ஜெனரல் அர்விந்த் வாலியா மற்றும் தலைமை இயக்குநர் (பணியாளர்கள்) லால் சந்த் மீனா ஆவார். இந்திய இராணுவப் பொறியாளர்கள் படையணியின் கீழ் இராணுவப் பொறியாளர் சேவைகள் உள்ளது. இப்படையில் இராணுவம் மற்றும் இராணுவ அல்லாத இளநிலை மற்றும் முதுநிலை பொறியாளர்கள் உள்ளனர். படையின் பணியிடம், தரம், அடிப்படைச் சம்பளம்
மண்டலங்கள்இப்படையானது முப்படைகளுக்கும் சேவை செய்ய இந்தியாவில் 600 பொறியியல் நிலையங்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் இப்படையின் மண்டலங்கள் வருமாறு:[2]
CE- தலைமைப் பொறியாளரr, CCE- தலைமை கட்டுமானப் பொறியாளர், AF- வான் படை இதனையும் காண்கஇந்திய இராணுவப் பொறியாளர்கள் படையணி மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia