மேல்சித்தாமூர் சமண மடம்
ஜின காஞ்சி ஜைன மடம், மேல் சித்தாமூர் (Jina Kanchi Jain Math, Melsithamur), என்பது தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றியம், செஞ்சிக்கு அருகில், திண்டிவனம்-செஞ்சி நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ள, மேல்சித்தாமூர் ஊராட்சிக்குட்பட்ட மேல் சித்தாமூர் என்ற ஊரில் உள்ள ஒரு சமண மடமாகும். மேல் சித்தாமூர், செஞ்சி நகரத்திலிருந்து 10 கிமி தொலைவிலும், திண்டிவனம் நகரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இது இந்த மாவட்டத்திற்கு மட்டுமன்றி தமிழகத்தில் மிக முக்கியமான சமண மடமாகத் திகழ்வதும், தமிழ்ச் சைனர் சமூகத்தின் முதன்மையான சமய மையமாகுவும் விளங்குகிறது.[1] தமிழ் சைன சமுதாயத்தின் முதன்மை சமயத் தலைவராக கருதப்படுபவரான, இந்த மடத்தின் தலைவரான ஸ்ரீலட்சுமி சேன பட்டாரக சுவாமிகள் தலைமையில் இது செயல்பட்டு வருகிறது.[2] வரலாறுபண்டைய காலத்திலிருந்து தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் பகுதிகள் சைன சமயத்தவரின் முதன்மை மையமாக இருந்து வந்துள்ளது.[3] கி.பி.16ஆம் நூற்றாண்டில் விழுப்புரம் மாவட்டம் உப்புவேலூரைச் சேர்ந்த வீரசேனாச்சாரியார் என்பவரால் இம்மடம் தோற்றுவிக்கப்பட்டது. இது, தமிழகத்தில் உள்ள திகம்பரப் பிரிவுச் சமணர்களின் தலைமை மடமாகுமாக உள்ளது.[4] வரலாற்று ரீதியாக, காஞ்சிபுரத்தின் ஒரு பகுதியாக உள்ள ஜின காஞ்சியில் ஒரு சைன மடம் இருந்தது, ஆனால் பிற்காலத்தில் அந்த மடம் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது எனப்படுகிறது.[5] இந்த மடத்தைச் சார்ந்து பள்ளிகளும், ஜிநாலயங்கள் எறப்படும் சமணக் கோயில்களும் இருக்கின்றன. கல்விச் சேவைக்கும் ஜிநாலாயங்கள் பாதுகாப்புக்கும் இந்த மடம் தொண்டாற்றி வருகின்றது.[6] வெங்கடப்ப நாயக்கர் (1570-1600) தனது ஆட்சிக்காலத்தில் சித்தமூரில் சைனக் கோயிலைக் கட்ட அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கி.பி. 1860 இல் சென்னை மாகாண ஆட்சிப்பணியில் இருந்த, ஸ்ரீ பாலையா என்னும் சைன அதிகாரி, சித்தமூர் சைனக் கோவிலில் மாளிகையை உருவாக்கினார். அதற்காக செஞ்சி வெங்கடரமணர் கோயிலில் இருந்த பெரிய கல் யானைகள் போன்றவற்றை உடைத்து அந்தக் கற்களைக் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தினார்.[7] மேல் சித்தாமூர் சமணக் கோயிலின் தேர்முட்டி மண்டபத்தின் அடியில் வைக்கப்பட்டுள்ள பெரிய கல் யானைகள் கவனிக்கத்தக்கவை. ஒரு பார்வைஇந்த ஊரில் இரண்டு சைனக் கோயில்கள் உள்ளன. அதில் ஒன்று பார்சுவநாதருக்குக் கட்டப்படது, மற்றொன்று மல்லிநாதருக்குக் கட்டப்பட்டதாகும். இங்குள்ள பாறையில் பழமையான பாகுபலி, பார்சுவநாதர், ரிசபநாதர், மகாவீரர் ஆகிய தீர்த்தரங்கர்களின் புடைப்புச் சிற்பங்களும், அம்பிகை யட்சினியின் புடைப்புச் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளன. இந்தச் சிற்பங்களானது கி. பி. 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை..[8] பர்சுவநாதர் கோயிலின் இராச கோபுரமானது ஏழு நிலைகளுடன் ஏறக்குறைய 70 அடி உயரமுடையதாக கட்டப்பட்டுள்ளது. தீர்த்தரங்கர்களின் சிற்பங்கள் கோவில் சுவர்களில் செதுக்கப்பட்டுள்ளன. பார்சுவநாதர் கோயிலில் முதன்மை வடிவமாக பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் பார்சுவநாதரின் 14 அடி உயர கருப்பு நிற சிலை உள்ளது. கோவிலில் 52 அடி உயர மனஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது. மால்லிநாதர் கோயிலானது திருவூரம் பள்ளி அல்லது கட்டம் பள்ளி என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. 7 ஆம் நூற்றாண்டில் ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட பாகுபலி, பர்சுவநாதர், ஆதிநாத பகவன், மகாவீரர் ஆகிய தீர்த்தரங்கர்களின் சிற்பங்கள் மற்றும் யட்சி தர்ம தேவி போன்ற சிற்பங்கள் அக்கால சிற்பங்களுக்கு சான்றாக உள்ளன.. பிற கோயில்கள்
இடம்இந்த மடமானது திண்டிவனத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும், செஞ்சியில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும் உள்ளது. படக்காட்சிகள்
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia