ரவீந்திரன் (நடிகர்)
ரவீந்திரன் மலையாள மற்றும் தமிழ்[1] திரைப்பட நடிகர் ஆவார். இவர் டிஸ்கோ ரவீந்திரன் என்ற பெயரால் திரையுலகில் அறியப்படுகின்றார். இவர் 1980 களில் தமிழ் திரை உலகில் பணியாற்றினார்.திரைக்கதை எழுத்தாளர், உள்துறை வடிவமைப்பாளர், தொகுப்பாளர், திரைப்பட அறிஞர், ஒரு நடிப்பு பயிற்சியாளர், சமூக ஆர்வலர் என பல்வேறு பன்முக ஆளுமை கொண்ட நபராக ரவீந்திரன் இருந்துள்ளார்.[2][3][4] வாழ்க்கை வரலாறுஇவர் இந்தியாவின் கேரளாவில் உள்ள திரிபுனித்துராவில் எலியாஸ் மற்றும் டாக்டர் சாரம்மா ஆகியோருக்குப் பிறந்தார். தென்னிந்திய ஃபிலிம் சேம்பர்ஸ், சென்னையில் 2 வருட நடிப்புப் படிப்பை முடித்தார் மற்றும் புனேவில் உள்ள பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்தார் . சுமா என்பவரை திருமணம் செய்துள்ளார். தம்பதியருக்கு மரீனா, பிபின், ஃபேபின் என மூன்று குழந்தைகள் உள்ளனர். அவரது மகன் ஃபேபின் இடுக்கி கோல்ட் (திரைப்படம்) மைக்கேலின் சிறுவயது பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைத்துறைTamil
எழுத்தாளராக
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia