ராக்காய் பனராபன்
ராக்காய் பனராபன் (ஆங்கிலம்: Rakai Panaraban; Srī Mahārāja Rakai Pānunggalan; இந்தோனேசியம்: Dyah Panunggalan Bhimaparakrama Linggapawitra Jawabhumandala) என்பவர் இந்தோனேசியா, மத்திய ஜாவா, மாதரம் இராச்சியத்தின் சஞ்சய மரபைச் சார்ந்த அரசர் ஆவார். இவரின் ஆட்சிக்காலம் 6 மார்ச் 784 - 3 மார்ச் 803. இவர் மாதரம் இராச்சியத்தின் 3-ஆவது அரசர் ஆவார். மாதரம் இராச்சியத்தின் ஆளுமையின் கீழ் சிறீ விஜயப் பேரரசு அமையப் பெற்றதும், மாதரம் இராச்சியத்தை ஆட்சி செய்த அதே அரசர்கள் சிறீ விஜயப் பேரரசையும் ஒருசேர ஆட்சி செய்தனர்.[1] அரச வரலாறுராக்காய் பனராபன் எனும் பெயர் மந்தியாசி கல்வெட்டு, வானுவா தெங்கா III கல்வெட்டு ஆகியவற்றின் மூலமாக அறியப்படுகிறது. மேலும் வங்சாகீர்த்தா கையெழுத்துச் சுவடியின் மூலமாக (Naskah Wangsakerta) அவரின் பெயர் மேலும் வலுப்படுத்தப்படுகிறது.[2] மந்தியாசி கல்வெட்டில் காணப்படும் மாதரம் இராச்சியத்தின் மன்னர்களின் பட்டியலில் சிறீ மகாராஜா ராக்காய் பனராபன் மூன்றாவது இடத்தில் உள்ளார். பழைய ஜாவானிய மொழியில் ராக்காய் என்றால் தலைவன் என்று பொருள் படும். ராகா (raka) அல்லது ராகே (rake) எனும் சமசுகிருதச் சொல்லில் இருந்து உருவானது. மேலும் காண்கமாதரம் இராச்சியத்தின் மன்னர்கள்மேற்கோள்கள்
சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia