ஜெயநேசன்
தபுந்தா ஆயாங் ஸ்ரீ ஜெயநேசன் அல்லது ஜெயநேசன் (ஆங்கிலம்: Dapunta Hyang Sri Jayanasa; Sri Jayanasa; இந்தோனேசியம்: Ḍapunta Hiyaṃ Śrī Jayanāśa) என்பவர் சிறீ விஜயப் பேரரசின் முதலாவது மன்னர் ஆவார். கெடத்துவான் சிறீ விஜய அரச மரபை (Kadatuan Srivijaya) தோற்றுவித்தவரும் இவரே ஆவார். நற்பேறு பெறவும்; தம்க்கு அருகில் உள்ள பகுதிகளை வெற்றி கொள்ளவும்; புனிதப் பயணம் செய்தவர் என 7-ஆம் நூற்றாண்டில் வடிக்கப்பட்ட சித்த யாத்திரைக் கல்வெட்டில் (Siddhayatra inscriptions) இவரின் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது. சித்த யாத்திரை (siddha yatra) என்றால் புனிதப் பயணம் என்று பொருள்படும். இவர் பொ.கா. 671 - 702-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சிறீ விஜய அரசை ஆட்சி செய்தார். வாழ்க்கை வரலாறுபொ.கா. 671-ஆம் ஆண்டு சிறீ விஜயத்திற்குப் பயணம் செய்து, அங்கேயே ஆறு மாத காலம் தங்கியிருந்த சீன பௌத்தத் துறவியாகிய இ சிங் சிறீ விஜயத்தின் மன்னர் காட்டிய பெருந்தன்மையாலும், விருந்தோம்பலினாலும், அன்பினாலும்; தான் பெரிதும் கவரப் பட்டதாகக் குறிப்பிடுகிறார்.[1] இ சிங் துறவியின் அறிக்கையில் குறிப்பிடப்படும் அரசர் பலெம்பாங் நகரில் கண்டெடுக்கப்பட்ட 682-ஆம் ஆண்டைச் சேர்ந்த கெடுக்கான் புக்கிட் கல்வெட்டு (Kedukan Bukit inscription);[2] மற்றும்; சித்த யாத்திரைக் கல்வெட்டு; ஆகிய இரண்டு கல்வெட்டுகளும் ஒருவரையே குறிப்பிடுகின்றன என்று பிற்காலத்தில் கருதப்பட்டது.[3][4] எனினும் பின்னர் இந்தக் கல்வெட்டுக்களின் பொருள் தன்மையில் வரலாற்று ஆசிரியர்களிடம் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன.[5][6][7] தபுந்தா ஆயாங்தபுந்தா ஆயாங் என்ற பட்டம் கொண்ட மன்னர் படகுகளின் மூலம் சித்த யாத்திரை எனப்படும் புனிதப் பயணம் மேற்கொண்டதாக சக ஆண்டு 605-இல், அதாவது பொ.கா. 683-இல், எழுதப்பட்ட கெடுக்கான் புக்கிட் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவர் மினங்கா தம்வான் (Minanga Tamwan) எனும் இடத்திலிருந்து இருபதாயிரம் படை வீரர்களுடன் புறப்பட்டு மத்தாஜாப் (Matajap) எனும் இடத்தை நோக்கிச் செல்கையில் பல்வேறு பகுதிகளையும் வெற்றி கொண்டார் என்று கெடுக்கான் புக்கிட் கல்வெட்டு குறிப்பிடுகிறது. கோத்தா காப்பூர் கல்வெட்டுபங்கா தீவில் கண்டு பிடிக்கப்பட்ட 686-ஆம் ஆண்டு கோத்தா கப்பூர் கல்வெட்டு (Kota Kapur inscription), ஜாம்பி உலுவில் கண்டுபிடிக்கப்பட்ட 686-ஆம் ஆண்டு காராங் பிராகி கல்வெட்டு (Karang Brahi inscription), லாம்புங் மாநிலத்தின் தென் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட பாலாஸ் பாசேமா கல்வெட்டு (Palas Pasemah inscription) ஆகிய கல்வெட்டுக்கள் அனைத்துமே, ஜெயநேசனின் சித்த யாத்திரையையும்; சிறீ விஜயப் பேரரசின் வெற்றிகளையும் ஒருமித்த கருத்துகளாப் பதிவு செய்கின்றன. ஜாம்பி, பலெம்பாங், தென் லாம்புங், பங்கா தீவு ஆகிய இடங்களை வெற்றி கொண்ட பின்னர் சிறீ விஜயப் பேரரசை ஜெயநேசன் நிறுவியதாக இந்தக் கல்வெட்டுக்கள் அனைத்தில் இருந்தும் அறியப்படுகிறது.[8] அத்துடன் ஜெயநேசன், சாவகத் தீவை நோக்கிப் படையெடுப்பு நடத்தியது; மேற்கு ஜாவாவில் இருந்த தருமநகரா இராச்சியத்தின் வீழ்ச்சிக்கும் பங்களித்தது என்றும் அறியப்படுகிறது. மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia