மந்தியாசி கல்வெட்டு
மந்தியாசி கல்வெட்டு அல்லது கெடு கல்வெட்டு (ஆங்கிலம்: Mantyasih Inscription; Kedu inscription; இந்தோனேசியம்: Prasasti Mantyasih; Prasasti Tembaga Kedu) என்பது இந்தோனேசியா, நடுச் சாவகம், வடக்கு மாகெலாங், மத்தேசி கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சஞ்சய அரச மரபு கல்வெட்டு ஆகும். இந்தக் கல்வெட்டு பாலிடுங் சாசனம் (Balitung charter) என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு முக்கியமான கல்வெட்டு ஆகும்; இந்தக் கல்வெட்டு சுராகார்த்தா இளவரசர்களில் ஒருவரால் சுராகார்த்தாவிற்குக் கொண்டுவரப்பட்டது.[1] இந்தக் கல்வெட்டு கிபி 907 சக ஆண்டு 828-ஆம் ஆண்டைச் சேர்ந்தது. தற்போது ஜகார்த்தா, ரத்யா புஸ்தகா அருங்காட்சியகத்தின் பாதுகாப்பில் உள்ளது. இந்தக் கல்வெட்டு சமசுகிருத மொழியில், நாகரி எழுத்துமுறையில் எழுதப்பட்டுள்ளது.[2]:108 பாலிதுங் மன்னர்பண்டைய மாதர இராச்சியத்தைச் சேர்ந்த சஞ்சய அரச மரபைச் சேர்ந்த மன்னர் பாலிதுங் (Balitung) என்பவரால் உருவாக்கப்பட்டது. மந்தியாசி கல்வெட்டில் மன்னர் பாலிதுங்கிற்கு முந்தைய மாதர இராச்சிய மன்னர்களின் வம்சாவளி வரலாறு உள்ளது. சிமா விழாமந்தியாசி கிராமத்தை பாலிதுங் மன்னர் சிமா எனும் (வரி இல்லாத) நிலமாக வழங்கியதாக மந்தியாசி கல்வெட்டு குறிப்பிடுகிறது. சிமா விழாவின் போது பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு கல் சாந்து இன்றும் மத்தேசி கிராமத்தில் காணப்படுகிறது. சுசுந்தரா மலை (இன்று சுண்டோரோ மலை) மற்றும் உகிர் சம்பிங் மலை ஆகிய இரண்டு மலைகளும் மந்தியாசி கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.[3] உள்ளடக்கம்இந்தக் கல்வெட்டு 828 சக (கிபி 907) காலத்தைச் சேர்ந்தது. மாதரம் ஆட்சி செய்த மன்னர்களின் வம்சாவளி பட்டியலைக் கொண்ட பகுதியில் B வரிகள் 7-9:
விளக்கங்கள்வரலாற்று ஆசிரியர் போஷ்மாதரம் இராச்சியத்தில், சஞ்சய வம்சம் மற்றும் சைலேந்திர வம்சம் என இரண்டு அரச மரபுகள் சமமாக ஆட்சி செய்ததாக போஷ் எனும் வரலாற்று ஆசிரியர் தம்முடைய புத்தகமான ஸ்ரீவிஜயா, டி சைலேந்திரவம்சம் என் டி சஞ்சயவம்சம் (1952) (Sriwijaya, de Sailendrawamsa en de Sanjayawamsa) எனும் நூலில் குறிப்பிடுகிறார். மாதரம் இராச்சியத்தின் நிறுவனர் மாதரத்தின் சஞ்சயன் என்பவரால் சஞ்சய வம்சம் நிறுவப்பட்டது. அவர் சிவ இந்து மதத்தை பின்பற்றினார். பிரமோதவர்தனிஅடுத்த மன்னர் பனங்கரன், போஷின் கூற்றுப்படி, சைலேந்திரர்களால் தோற்கடிக்கப்பட்டார். இதனால் மாதரம் இராச்சியத்தில் இரண்டு வம்சங்கள் இருந்தன. சஞ்சயர்கள் ஜாவாவின் வடக்குப் பகுதிகளை ஆட்சி செய்தனர்; அதே நேரத்தில் சைலேந்திரர்கள் தெற்கு ஜாவாவை ஆட்சி செய்தனர். பிரமோதவர்தனி என்ற சைலேந்திர மன்னர் சமரதுங்கனின் மகள், தன் மாமனாரின் அரியணைக்குப் பிறகு சஞ்சய வம்சாவளியைச் சேர்ந்த ராக்காய் பிக்காத்தான் (Rakai Pikatan) என்பவரை மணந்தார். இதன் விளைவாக, சஞ்சய வம்சம் மாதரம் இராச்சியத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. ராக்காய் என்ற பட்டம் ஒரு வம்சப் பட்டம் என்று போஷ் கருதுகிறார். மந்தியாசி கல்வெட்டில் சஞ்சய மன்னர்களின் பட்டியல் பதிவு செய்யப்பட்டுள்ளது. சஞ்சய மன்னர்களின் பட்டியல் பதிவு
மேலும் காண்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia