வானுவா தெங்கா III கல்வெட்டு

வானுவா தெங்கா III கல்வெட்டு
Wanua Tengah III Inscription
Prasasti Wanua Tengah III
செய்பொருள்எரிமலைப் படிகப்பாறை
அளவு1. நீளம் 53.5 செ.மீ; அகலம் 23.5  பருமன் 2,5 மி.மீ
2. நீளம் 56 செ.மீ; அகலம் 26  பருமன் 2,5 மி.மீ
எழுத்துபழைய ஜாவானிய மொழி சமசுகிருதம்
உருவாக்கம்822 சக ஆண்டு (908)
கண்டுபிடிப்புஇந்தோனேசியா, மத்திய ஜாவா மாநிலம் தெமாங்குங் நகர நகரம்; கலோரான் காண்டுலன் டுக்கோ கெடுங்லோ கிராமம்
தற்போதைய இடம்யோககர்த்தா தொல்பொருள் மையம்
(Balai Arkeologi Yogyakarta)
சிடாண்டாங் கல்வெட்டு; 1996-ஆம் ஆண்டில் மாதரம் இராச்சியத்தின் நினைவாக; மத்திய ஜாவா, செமெராங் பூர்வோசாரி கிராமத்தில் உருவாக்கப்பட்ட நினைவுச்சின்னம்

வானுவா தெங்கா III கல்வெட்டு (ஆங்கிலம்: Wanua Tengah III Inscription; இந்தோனேசியம்: Prasasti Wanua Tengah III) என்பது பண்டைய மாதரம் இராச்சியத்தின் கி.பி 908-ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஆகும். இந்தோனேசியா, மத்திய ஜாவா மாநிலம், தெமாங்குங் நகரத்திலிருந்து வடகிழக்கே சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள கலோரான் காண்டுலன் டுக்கோ கெடுங்லோ (Dukuh Kedunglo) கிராமத்தின் நெல் வயலில் 1983-இல் கண்டுபிடிக்கப்பட்டது.[1]

இந்தக் கல்வெட்டில், மன்னர் பாலிதுங்கின் ஆட்சிக்கு முந்தைய காலத்தில் மாதரம் இராச்சியத்தை ஆட்சி செய்த மன்னர்களின் முழுமையான பட்டியல் உள்ளது. மாதரம் இராச்சியத்தின் மன்னர்களின் 13 பெயர்களைக் குறிப்பிடுவதால் இந்தக் கல்வெட்டு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.[2]:127

இதற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட மந்தியாசி கல்வெட்டின் (Kedu Copper Inscription) மூலமாக முழுமையான மன்னர்களின் பட்டியல் கிடைக்கவில்லை. எனினும், அந்தக் குறைபாட்டை வானுவா தெங்கா III கல்வெட்டு நிறைவு செய்கிறது. வானுவா தெங்கா III கல்வெட்டில் மாதரம் இராச்சியத்தின் மன்னர்கள் அரியணை ஏறிய ஆண்டுகள், இடங்கள் போன்ற மிக முக்கியமான தகவல்கள் எல்லாம் பதிவு செய்யப்பட்டு உள்ளன. [3]:25

வரலாறு

வானுவா தெங்கா III கல்வெட்டு, வானுவா தெங்கா கிராமத்தில் வரி நீக்கப்பட்ட ஒரு சீமா நிலத்தின் (Sīma land) நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. ஒரு புத்த மடத்தை ஆதரிப்பதற்காக மன்னர் பனங்கரன் என்பவரால் அந்த வரி இல்லாத நிலம் முதமுதலில் வழங்கப்பட்டது.

அதன் பின்னர், அவருக்குப் பின்னர் வந்த மன்னர்களும்; ராக்காய் பிக்கத்தான் மன்னரும் தொடர்ந்து வரி விலக்கு அளித்ததை இந்தக் க்லவெட்டு பதிவு செய்துள்ளது.

மன்னர்களின் பட்டியல்

வானுவா தெங்கா III கல்வெட்டு வழங்கும் மன்னர்களின் பட்டியல் (கிபி 746 - கிபி 898):

  1. பனங்கரன் - மாதரத்தின் சஞ்சயன் - (Sanjaya, Rakai Mataram) (746)
  2. ராக்காய் பனராபன் - (Panaraban) (784)
  3. சமரகரவீரன் - (Rakai Warak Dyah Manara) (803)
  4. தியா கூலா - (Dyah Gula) (827)
  5. ராக்காய் காருங் - (Sang Lumah i Tluk) (829)
  6. ராக்காய் பிக்கத்தான் - (Rake Pikatan Dyah Saladu) (847)
  7. ராக்காய் காயூவாங்கி - (Dyah Lokapala) (855)
  8. திய தகவாசி - (Dyah Tagwas) (885)
  9. ராக்காய் பனும்வங்கன் - (Rake Panumwangan Dyah Dewendra) (885)
  10. ராக்காய் குருண்வாங்கி - (Rake Gurunwangi Dyah Bhadra) (887)
  11. காலி - 7 ஆண்டுகள் (894)
  12. ராக்காய் வத்துகுமாலாங் - (Rake Wungkalhumalang Dyah Jbang) (894)
  13. தியா பாலிதுங் - (Rake Watukara Dyah Balitung) ( 898)

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. Melempangkan Mataram kuno, 15 Desember 1984. Copyright 2011 TempoInteraktif. Diakses 26 Juli 2011.
  2. Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. ISBN 978-0-8248-0368-1.
  3. Trigangga (1994). "Analisis Pertanggalan Prasasti Wanua Tengah III". Berkala Arkeologi 14 (2): 22–26. doi:10.30883/jba.v14i2.636. 

சான்றுகள்

  • Boechari. (2018). Tafsiran Atas Prasasti Wanua Tengah III. Dalam Melacak Sejarah Kuno Indonesia Lewat Prasasti. Jakarta: Kepustakaan Populer Gramedia in collaboration with the University of Indonesia and the École française d’Extrême-Orient, 467–471.
  • Kusen. (1994). Raja-raja Mataram Kuna dari Sanjaya Sampai Balitung Sebuah Rekonstruksi Berdasarkan Prasasti Wanua Tengah III. Berkala Arkeologi, 14(2), 82–94. https://doi.org/10.30883/jba.v14i2.721
  • Tjahjono, B. D. (2008). Balitung Putra Daerah Yang Sukses Menjadi Raja Mataram Kuna. Berkala Arkeologi, 28(1), 33–45. https://doi.org/10.30883/jba.v28i1.353

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya