லிகோர் கல்வெட்டுலீகோர் கல்வெட்டு (ஆங்கிலம்: Ligor Inscription; இந்தோனேசியம்: Ligor) என்பது தெற்கு தாய்லாந்து மலாய் தீபகற்பத்தில், லிகோர் எனும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஆகும். இந்தக் கல்வெட்டு நக்கோன் சி தம்மராத் இராச்சியம் (Nakhon Si Thammarat Kingdom) சார்ந்த கல்வெட்டு என்றும் அறியப்படுகிறது. கிபி 775-ஆம் ஆண்டைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டு இரண்டு பக்கங்களிலும் எழுதப்பட்டு செதுக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி லிகோர் ஏ கல்வெட்டு (Ligor A inscription) என்று அழைக்கப்படுகிறது.[1] இது வியாங் சா கல்வெட்டு (Viang Sa inscription) என்றும் அழைக்கப்படுகிறது. லிகோர் பி கல்வெட்டுகல்வெட்டின் மறுபக்கம் லிகோர் பி கல்வெட்டு (Ligor B inscription) என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கல்வெட்டு காவி எழுத்து முறையில் (Kawi script) எழுதப்பட்டுள்ளது.[2] லிகோர் பி கல்வெட்டு சைலேந்திர அரச மரபைச் சேர்ந்த மன்னர் பனங்கரன் (Mahārāja dyāḥ Pañcapaṇa kariyāna Paṇaṃkaraṇa) (Panangkaran), என்பவரால் எழுதப்பட்டது. அத்துடன் இந்த லிகோர் பி கல்வெட்டு சிறீவிஜயம் மற்றும் சைலேந்திர வம்சம் ஆகிய இரு அரச மரபினருடன் தொடர்புடையது. லிகோர் ஏ கல்வெட்டுலிகோர் ஏ கல்வெட்டு, கஜரன் (Kajara) திரிசமய சைத்தியத்தைக் (Trisamaya caitya) கட்டிய தருமசேது என்ற சிறீவிஜய மன்னனைப் பற்றி கூறுகிறது.[3] லிகோர் பி கல்வெட்டு காவி எழுத்துகளில் எழுதப்பட்டது.[4] சைலேந்திர வம்சத்தைச் சேர்ந்த ஸ்ரீ மகாராஜா என்ற பட்டத்தைக் கொண்ட விஷ்ணு என்ற மன்னரைப் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது.[1][5][6] மேலும் காண்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia