சிவக்கிரக கல்வெட்டு
சிவக்கிரக கல்வெட்டு அல்லது வந்தில் கல்வெட்டு (ஆங்கிலம்: Shivagrha Inscription; Wantil inscription; இந்தோனேசியம்: Prasasti Shivagrha அல்லது Prasasti Wantil; சமசுகிருத ரோமன்: Śivagṛha; தேவநாகரி: शिवगृह) என்பது இந்தோனேசியா, மத்திய ஜாவா மாநிலம், யோக்யகர்த்தா, பிரம்பானான் கோயில் வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும். இந்தக் கல்வெட்டு 778 சக ஆண்டு; பொ.ஊ. 856-ஆம் ஆண்டைச் சேர்ந்தது. தற்போது ஜகார்த்தா, இந்தோனேசிய தேசிய அருங்காட்சியகத்தின் பாதுகாப்பில் உள்ளது; கல்வெட்டு கணக்கெடுப்பு பதிவு எண் D.28. இந்தக் கல்வெட்டு சமசுகிருத மொழியில், நாகரி எழுத்துமுறையில் எழுதப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டின் திகதி; எண்களில் குறிப்பிடப்படாமல் சந்திர செங்காலா (Chandrasengkala|) எனும் எழுத்து முறைமையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ராக்காய் பிக்கத்தானின் ஆட்சியின் இறுதியில், தியா லோகபாலாவின் (Dyah Lokapala) (ராக்காய் காயூவாங்கி) உத்தரவின் பேரில் இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டது. இந்தக் கல்வெட்டு, சிவக்கிரகம் (House of Shiva) என்று அழைக்கப்படும் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பிருமாண்டமான கோயில் வளாகத்தின் விரிவான விளக்கத்தைக் கொடுக்கிறது. அந்த வகையில் கல்வெட்டில் சொல்லப்படும் கோயில், பிரம்பானான் கோயில் வளாகத்துடன் ஒற்றுள்ளது.[1] வரலாறுசிவகிரகக் கோயிலுக்கு, அதாவது பிரம்பானான் கோயில் வளாகத்திற்கு அருகில் ஓர் ஆற்றின் வழித்தடத்தை மாற்றுவதற்கான ஒரு பொது நீர்த் திட்டம் பற்றியும் சிவக்கிரகக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆறு, தற்போதைய ஓபாக் ஆறு (Opak River) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த ஆறு தற்போது பிரம்பானான் கோயில் வளாகத்தின் மேற்குப் பகுதியில்; வடக்கில் இருந்து தெற்காக ஓடுகிறது. ஓபாக் ஆறுமுதலில் இந்த ஆறு கிழக்கு நோக்கி மேலும் வளைந்திருந்தது. அத்துடன் அது பிரதான கோயிலுக்கு மிக அருகில் இருப்பதாகவும் கருதப்பட்டது. சிவகிரக கோயில் வளாகத்தின் வெளிப்புறப் பகுதியில் வடக்கு-தெற்கு அச்சில் ஆற்றை வெட்டுவதன் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். கோயில் விரிவாக்கத்திற்கு பெரிய அளவிலான இடத்தை உருவாக்க முயற்சிகள் செய்யப்பட்டன. அதன் விளைவாக முந்தைய ஆற்றுப் பாதை, கற்கள் மற்றும் மண் பாறைகளால் நிரப்பப்பட்டு சமன் செய்யப்பட்டது. இப்போது அந்த இடம் நிரப்பு கோயில்களுக்கான (Candi Perwara) இடமாக உள்ளது. பாலபுத்திர தேவன்சிவக்கிரகக் கல்வெட்டில், மன்னர் ராக்காய் பிக்கத்தான் ஒரு சிவபக்தர் என்றும்; அவரது மனைவியும் அரசியுமான பிரமோதவர்தனி பௌத்த மதத்தைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு, ராக்காய் பிக்கத்தானுக்கு எதிரான அரச வாரிசு உரிமைக்கான போரைப் பற்றியும் குறிப்பிடுகிறது. ராக்காய் பிக்கத்தானுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் தங்களின் அடைக்கலத்திற்காக, நூற்றுக் கணக்கான கற்களால் ஒரு கோட்டையைக் கட்டி இருந்தனர். இந்தக் கோட்டை ரத்து போக்கோ மலையின் (Ratu Boko) அடிவாரத்தில் இருந்தது. இந்தக் கிளர்ச்சிக்கு பாலபுத்திர தேவன் (Balaputra) தான் முதனமை நபராகக் கருதப்பட்டார். கிளர்ச்சிஇருப்பினும், இந்தக் கோட்பாடு சரியானதல்ல; ஏனெனில் ராக்காய் பிக்கத்தான் அதிகாரத்திற்குச் சவால் செய்தவர் ராக்காய் வாலிங் பு கும்பயோனி (Rakai Walaing pu Kumbayoni) என்பவர்தான் என்று பின்னர் கண்டறியப்பட்டது. அந்த நேரத்தில் ராக்காய் பிக்கத்தான் மாதரம் இராச்சியத்தின் புதிய மன்னராக இருந்தார். கிளர்ச்சியாளர்களின் தலைவர் ரக்காய் வாலிங் என்பவர் ஒரு சக்திவாய்ந்த நில உரிமையாளராக இருந்தார். ஒரு காலத்தில் ஜாவாவை ஆண்ட மன்னரின் வழித்தோன்றல் என்று அவர் கூறிக்கொண்டார். மேலும் காண்கமேற்கோள்கள்
சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia