தாலாங் துவோ கல்வெட்டு
தாலாங் துவோ கல்வெட்டு (ஆங்கிலம்: Talang Tuo Inscription; இந்தோனேசியம்: Prasasti Talang Tuo) என்பது 1920 நவம்பர் 17-ஆம் தேதி, இந்தோனேசியா, பலெம்பாங்கிற்கு அருகிலுள்ள புக்கிட் செகுந்தாங் மலை அடிவாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறீவிஜய கல்வெட்டு ஆகும். இந்தக் கல்வெட்டு லூயிஸ் கான்ஸ்டன்ட் வெஸ்டெனெங் (Louis Constant Westenenk) (1872 - 1930) எனும் இடச்சு மொழியியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் சுமாத்திராவின் கிழக்கு கடற்கரை மாநிலத்தில் (Sumatra's East Coast Residency) ஆளுநராகப் பணியாற்றியவர் ஆவார்.[1] பொதுஇந்தக் கல்வெட்டு, சிறீவிஜய மன்னர் ஜெயநேசன் அவர்களால் அனைத்து உயிர்களின் நலன்களுக்காக உருவாகப்பட்ட சிறீ சேத்திர பூங்காவை (Śrīksetra park) பற்றிக் கூறுகிறது.[2]:82–83 இந்தக் கல்வெட்டு நல்ல நிலையில் தெளிவாகப் பொறிக்கப்பட்ட எழுத்துகளுடன் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அளவு 50 செ.மீ × 80 செ.மீ. ஆகும். சாலிவாகன ஆண்டு 606; (23 மார்ச் 684) காலத்தைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டு, பல்லவ எழுத்துமுறையில், பழைய மலாய் மொழியில் எழுதப்பட்டுள்ளது.[3] 14 வரிகளைக் கொண்ட கல்வெட்டுஇந்தக் கல்வெட்டு 14 வரிகளைக் கொண்டுள்ளது. இந்தக் கல்வெட்டின் உள்ளடக்கத்தை முதன்முதலாக மொழிபெயர்த்த அறிஞர்கள் வான் ரோங்கெல் (Van Ronkel); மற்றும் போஷ் (Bosch) எனும் இடச்சு மொழி ஆய்வாளர்கள் ஆவார்கள். அவர்களின் கண்டுபிடிப்பு ஆக்டா ஓரியண்டலியா எனும் இடச்சு நாட்டுச் செய்தி இதழில் வெளியிடப்பட்டது.[4] 1920-ஆம் ஆண்டு முதல், இந்தக் கல்வெட்டு ஜகார்த்தா, இந்தோனேசியாவின் தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு உள்ளது. இதன் வரலாற்றுப் பதிவு எண் D.145. உள்ளடக்கம்இந்தக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட தாலாங் துவோ புக்கிட் கிராமத்தின் பெயரிலேயே அதற்கும் பெயரிடப்பட்டது. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டு, ஒரு குறிப்பிடத்தக்க சிறீ விஜய தொல்பொருள் கண்டுபிடிப்பாகும். தென்கிழக்கு ஆசியாவில் பௌத்த மதத்தின் தொடக்கால வளர்ச்சியைப் பற்றிய தரவுகளை இந்தக் கல்வெட்டு வழங்கி உள்ளது. அதே வேளையில் இந்தக் கல்வெட்டு உலகின் பழமையான கல்வெட்டுகளில் ஒன்றாகவும் அறியப்படுகிறது.[5] மேலும் காண்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia