வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபை

வெங்கலச்செட்டிக்குளம் தமிழ்ப் பிரதேச சபை
வகை
வகை
தலைமை
தலைவர்
தாஜிதீன் முகம்மது இம்தியாசு, அகில இலங்கை மக்கள் காங்கிரசு
25 சூன் 2025 முதல்
துணைத் தலைவர்
தேவசகாயம் சிவானந்தராசா, சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி
25 சூன் 2025 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்18
அரசியல் குழுக்கள்
அரசு (4)

எதிர் (14)

தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
2025
வலைத்தளம்
vavuniyanorth.ps.gov.lk/

வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபை (Vengalasettikulam Divisional Council) என்பது இலங்கையின் வடமாகாணத்தில் வவுனியா மாவட்டம், வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவுக்கான உள்ளூராட்சி சபை ஆகும். சாலைகள், சுகாதாரம், வடிகால்கள், வீட்டுவசதி, நூலகங்கள், பொது பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் பொது சேவைகளை வழங்குவதற்கு இந்தச் சபை பொறுப்பாகும். இச்சபைக்கான உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு 14 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 9 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 23 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2][3]

வரலாறு

இலங்கையின் உள்ளூராட்சிகளின் வரலாற்றில் 1987 இல் ஒரு பெரும் மறுசீரமைப்பு இடம்பெற்றது. 1981 இல் அமைக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபைகள் இல்லாமலாக்கப்பட்டு அவற்றுக்குப் பதிலாகப் பிரதேச சபைகள் அமைக்கப்பட்டன. 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டம் 1987 ஏப்ரல் 15 அன்று நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு 1988 சனவரி 1 முதல் 257 பிரதேச சபைகள் செயற்பட ஆரம்பித்தன. 1983 இல் நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரங்கள் காரணமாக இலங்கை அரசாங்கம் அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்தி நாட்டின் வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து உள்ளூராட்சிகளையும் இடைநிறுத்தியது.[4]

வட்டாரங்கள்

1987 ஆம் ஆண்டின் 15-ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் கீழ் வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபை உருவாக்கப்பட்டது.[5] 26ம் இலக்க 2015 ஆகத்து 21 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளை சட்டத்தின் 3ஆவது பிரிவின் கீழ் உள்ளுராட்சி அதிகார சபையின் ஆளுகைப் பிரதேசத்தின் எல்லைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ள வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபையின் ஆளுகைப் பிரதேசம் 10 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபையின் கீழ் வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக எல்லைகள் உள்ளடங்குகின்றன.[3][5]

  1. பெரியதம்பனை-பிரமனாலங்குளம்
  2. ஆண்டியாபுளியங்குளம் (2 உறுப்பினர்கள்)
  3. குருக்கள்புதுக்குளம்-கந்தசாமிநகர்
  4. பாவற்குளம்
  5. சூடுவெந்தபுலவு
  6. பெரியபுளியாலன்குளம்
  7. முகத்தான்குளம்-செட்டிக்குளம்
  8. முதலியார்குளம்-கிறிஸ்தவகுளம்
  9. நேரியகுளம்
  10. சின்னசிப்பிக்குளம்

தேர்தல் முடிவுகள்

2011 உள்ளூராட்சித் தேர்தல்

2011 மார்ச் 17 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[6]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு[குறிப்பு 1] 3,587 46.85% 5
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி[குறிப்பு 2] 2,295 29.98% 2
  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு 1,587 20.73% 2
  ஐக்கிய தேசியக் கட்சி 118 1.54% 0
  மக்கள் விடுதலை முன்னணி 64 0.84% 0
சுயேச்சைக் குழு 5 0.07% 0
செல்லுபடியான வாக்குகள் 7,656 100.00% 9
செல்லாத வாக்குகள் 412
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 8,068
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 18,925
வாக்குவீதம் 42.63%

வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபையின் தலைவராக கப்ரியேல் அந்தோனி ஐயா (ததேகூ), துணைத் தலைவராக தங்கராசா சந்திரமோகன் (ததேகூ) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[7]

2018 உள்ளூராட்சித் தேர்தல்கள்

2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 11 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 8 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 19 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தல் முடிவுகள் வருமாறு:[5]

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள் % வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
பெற்ற
வாக்குகளுக்குரிய
உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு[குறிப்பு 3] 2,671 21.05% 5 0 5
  சிறீ லங்கா சுதந்திரக் கட்சி 2,923 23.04% 3 1 4
  ஐக்கிய தேசியக் கட்சி 2,802 22.09% 2 2 4
  தமிழர் விடுதலைக் கூட்டணி[குறிப்பு 4] 2,091 16.48% 1 2 3
  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு 1,002 7.90% 0 1 1
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 602 4.75% 0 1 1
  இலங்கை பொதுசன முன்னணி 453 3.57% 0 1 1
  மக்கள் விடுதலை முன்னணி 453 3.57% 0 1 1
செல்லுபடியான வாக்குகள் 12,686 100.00% 11 8 19
செல்லாத வாக்குகள் 211
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 12,897
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 16,680
வாக்குவீதம் 77.32%

வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபையின் தலைவராக அந்தோனி ஆசீர்வாதம் (பெரியபுளியாலன்குளம், இலங்கை சுதந்திரக் கட்சி), துணைத் தலைவராக சிவாஜினி நவரத்தினம் (ஐக்கிய தேசியக் கட்சி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[5]

2025 உள்ளூராட்சித் தேர்தல்

2025 மே 6 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[8][3] 11 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 7 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 18 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள் % வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
பெற்ற
வாக்குகளுக்குரிய
உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
  ஐக்கிய மக்கள் சக்தி 2,838 21.18% 4 0 4
  தேசிய மக்கள் சக்தி 2,085 15.56% 2 1 3
  இலங்கைத் தமிழரசுக் கட்சி 1,957 14.61% 3 0 3
  சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 1,661 12.40% 1 1 2
இலங்கைத் தொழிற் கட்சி 1,573 11.74% 0 2 2
சனநாயகத் தேசியக் கூட்டணி 1,225 9.14% 1 1 2
  சுயேச்சைக் குழு 2 340 2.54% 0 1 1
சர்வசன அதிகாரம் 339 2.53% 0 0 0
  சுயேச்சைக் குழு 1 328 2.45% 0 0 0
  ஐக்கிய தேசியக் கட்சி 240 1.79% 0 0 0
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 186 1.39% 0 0 0
செல்லுபடியான வாக்குகள் 13,398 100.00% 11 7 18
செல்லாத வாக்குகள் 178
பதிவான மொத்த வாக்குகள் 13,576
பதிவில் உள்ள வாக்காளர்கள் 19,222
வாக்களித்தோர் 70.63%

2025 தேர்தலில் வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபையின் தலைவராக தாஜிதீன் முகம்மது இம்தியாசு (அகில இலங்கை மக்கள் காங்கிரசு), துணைத் தலைவராக தேவசகாயம் சிவானந்தராசா (சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[9]

இவற்றையும் பார்க்க

குறிப்புகள்

  1. ஈபிஆர்எல்எஃப் (சு), இதக, புளொட், டெலோ, தவிகூ, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டணி
  2. அஇமகா, ஈபிடிபி, இசுக
  3. இதக, புளொட், டெலோ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
  4. தவிகூ, ஈபிஆர்எல்எஃப் (சு) ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.

மேற்கோள்கள்

  1. "LG polls cost to hit Rs. 4 b". Daily FT. 5-12-2017. http://www.ft.lk/front-page/LG-polls-cost-to-hit-Rs--4-b/44-644557. பார்த்த நாள்: 23-12-2017. 
  2. "Amended Local Government Elections Bill approved in Parliament". டெய்லி நியூசு. 25-08-2017. 
  3. 3.0 3.1 3.2 "வவுனியா மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டோர் விபரம் - 2025" (PDF). அரச வர்த்தமானி. Archived (PDF) from the original on 1 June 2025. Retrieved 6 June 2025.
  4. "TNA urges PM to put off NE local polls". தமிழ்நெட். 11 September 2002. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=7457. 
  5. 5.0 5.1 5.2 5.3 "Local Authorities Election - 10.02.2018" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். p. 1087. Archived (PDF) from the original on 12 May 2025. Retrieved 7 June 2025.
  6. "Local Authorities Election - 17.03.2011 Vavuniya District Venkalacheddikulam Pradeshiya Sabha". Department of Elections, Sri Lanka.
  7. "PART IV (B) — LOCAL GOVERNMENT Notices under the Local Authorities Elections Ordinance (Chapter 262) LOCAL AUTHORITY ELECTIONS ORDINANCE". The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka 1699/5. 28 March 2011 இம் மூலத்தில் இருந்து 4 October 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111004024857/http://www.documents.gov.lk/Extgzt/2011/PDF/Mar/1699-5/1699_5E.pdf. 
  8. "Local Authorities Election - 6.05.2025 Vavuniya District Vavuniya North Pradeshia Sabha" (PDF). Department of Elections, Sri Lanka.{{cite web}}: CS1 maint: url-status (link)
  9. "ACMC வசமான வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபை". Vanni News. Archived from the original on 13 சூலை 2025. Retrieved 13 சூலை 2025.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya