நான்கு சுவர்கள்
நான்கு சுவர்கள் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் [2] வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது 1971 பெப்ரவரி 6 அன்று வெளியாகி, வணிக ரீதியாக தோல்வியடைந்தது. கதைதிருடர்களான ஜெய்சங்கரும், ரவிச்சந்திரனும் ஒரு வேட்டுத்துத் திருடச் செல்கின்றனர். அங்கிருக்கும் முதியவர் அவர்களிடம் சாவியைத் தருகிறார். அதன் பிறகே அவர் தாங்கள் வளர்ந்த அநாதை விடுதியின் தலைவர் என்று அவர்களுத்துத் தெரிகிறது. நீங்கள் மனது வைத்தால் குற்றவாளிகளைத் திருத்தமுடியும் என்று கூறிவிட்டு இறந்துவிடுகிறார். இதையடுத்து இருவரும் குற்றவாளிகள் சிலரைத் தேடிப்பிடித்து, அந்த முதியவரின் நிலத்தில் வேலை செய்யவைத்து திருத்துகின்றனர். நடிகர்கள்தயாரிப்புநாங்கு சுவர்கள் படத்தை கே. பாலசந்தர் கதை, வசனம் எழுதி இயக்கினார். இப்படத்தை ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட் பதாகையின் கீழ் வி. எஸ். சர்மா, பி. எஸ். மணி ஆகியோரால் தயாரிக்கப்பட்டது.[1] இது பாலச்சந்தரின் முதல் வண்ணப் படமாகும்.[3] அத்துடன் நடிகர்கள் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் இணைந்து நடித்த இரண்டாவது படமாகும்.[4] ஸ்ரீவித்யா பார்வை குறைபாடுள்ள ஒரு பாத்திரத்தில் நடித்தார், அதற்காக அவர் காண்டாக்ட் லென்ஸ்கள் அணிய வேண்டியிருந்தது.[5] பாடல்கள்படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கு கண்ணதாசனின் வரிகள் எழுத எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார்.[6] ஓ மைனா ஓ மைனா பாடல் படத்தில் இரண்டுமுறை இடம்பெற்றது. எல். ஆர். ஈசுவரி பாடிய நான் ஒரு பாட்டுத் தோட்டம் என்ற பாடல் முதலில் நான் ஒரு பள்ளிக்கூடம் என்று எழுதப்பட்டிருந்தது. பின்னர் அது மாற்றப்பட்டது.
வரவேற்புநாங்கு சுவர்கள் 1971 பிப்ரவரி 6 அன்று வெளியாகி,[7] வணிகரீதியாக தோல்வியடைந்தது.[4] இப்படமானது வி. சாந்தாராம் இயக்கிய இந்தி படமான தோ ஆங்கேன் பாரா ஹாத் (1957) எனபதன் பாதிப்பில் உருவானது என்று பிலிம் வேர்ல்டின் டி. ஜி. வைத்தியநாதன் விவரித்தார்.[8] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia