2009 யாழ்ப்பாண மாநகரசபை தேர்தல்2009 யாழ்ப்பாண மாநகரசபை தேர்தல் 2009 ஆகஸ்ட் 8 ஆம் நாள் [1][2] நடத்தப்பட்டது. யாழ்ப்பாண மாநகரசபைக்கு 23 பேரைத் தெரிவுச் செய்யும் வகையில் இத்தேர்தல் அமைந்தது. 2009 மே 18 ஆம் நாள் ஈழப்போர் முடிவடைந்ததாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இதுவாகும். அத்துடன் வட மாகாணத்தில் 11 ஆண்டுகளுக்குப் பின்னர் இடம்பெற்ற முதலாவது உள்ளூராட்சி சபைத் தேர்தலும் இதுவாகும். மொத்தம் 23 இடங்களில் அரசு சார்பு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 13 இடங்களைப் பெற்று மாநகராட்சியைப் பெற்றது.[3]. இத்தேர்தலில் மொத்தம் 22% வாக்காளர்களே வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ் மாநகரசபைக்கு கடைசியாக ஜனவரி 29, 1998 இல் தேர்தல்கள் இடம்பெற்றிருந்தன. வேட்புமனுத் தாக்கல்இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 18 தொடக்கம் ஜூன் 25 ஆம் நாள் பகல் 12.00 மணி வரை வேட்பு மணுக்கள் ஏற்கப்பட்டன[2]. இக்கால எல்லையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, இலங்கை தமிழரசுக் கட்சி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், மூன்று சுயேட்சைக்குழுக்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன். ஆனால் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஒரு சுயேட்சைக்குழு என்பன தாக்கல் செய்தல் வேட்பு மனுக்கள் தேர்தல் தெரிவு அதிகாரியால் செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டது[1]. முடிவுகள்
இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia