2021–23 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைத் தொடரின் இறுதிப்போட்டி 2023 சூன் 7 முதல் 11 வரை ஆத்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையே இலண்டனில்ஓவல் அரங்கில் நடைபெற்றது. இது ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் இரண்டாவது பதிப்பாகும்.[1] இறுதிப் போட்டியில் ஆத்திரேலியா 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது ஐசிசி தேர்வுத் துடுப்பாட்ட வாகையில் ஆத்திரேலியாவின் முதல் வெற்றியாகும். கூடுதலாக, அவர்களுக்கு $1.6 மில்லியன் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது, அதே நேரத்தில் இந்திய அணி US$800,000 ரொக்கப் பரிசைப் பெற்றது.[2] இறுதிப்போட்டியில் ஆத்திரேலியாவுக்குக் கிடைத்த வெற்றி ஆத்திரேலியாவை உலகின் முதல் அணியாகவும், இதுவரை அனைத்து வகை ஐசிசி விருதுகளையும் வென்ற ஒரே அணியாகவும் நிலைநிறுத்தப்பட்டது.[3]
2021–23 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை தொடக்கக் கட்டத்தில் ஆத்திரேலியாவும் இந்தியாவும் முதல் இரண்டு அணிகளாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. கோவிட்-19 பெருந்தொற்று, மேலும் பல தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டதன் காரணமாக இரு அணிகளும் அதிக புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், தொடக்க நிலைகளில் வெற்றி சதவீதத்தால் தீர்மானிக்கப்பட்டது.[4]
இறுதிப் போட்டிக்கு முன்னேறி ஐசிசி ஆண்கள் தேர்வு அணி தரவரிசையில் இந்தியா முதலிடத்தையும், ஆத்திரேலியா இரண்டாவது இடத்தையும் பிடித்தது. ஆத்திரேலியா உலக தேர்வு இறுதிப் போட்டியில் முதல் தடவையாக விளையாடுகிறது. இந்தியா 2021 இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் தோற்றது.[5]2022-23 பார்டர்-கவாசுகர் கிண்ணத்திற்காக இந்தியாவும் ஆத்திரேலியாவும் தமக்கிடையே விளையாடியத் கடைசி தேர்வுப் போட்டியாக அமைந்தது. தி ஓவல் அரங்கில் ஆத்திரேலியா 38 தேர்வுப் போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளிலேயே வென்றது, இந்தியா இரண்டு போட்டிகளில் மட்டுமே வென்றது.[6]
விராட் கோலி (இந்) தேர்வுப் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக 2,000 ஓட்டங்கள் எடுத்த ஐந்தாவது துடுப்பாளர் ஆனார்,[14] மேலும் ஒரு அணிக்கு எதிராக 5,000 பன்னாட்டு ஓட்டங்களை எடுத்த இரண்டாவது துடுப்பாளர் ஆனார்.[15]