இங்கிலாந்து துடுப்பாட்ட அணி 2021 சனவரியில் இலங்கையில் இரண்டு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுப் போட்டிகளில் விளையாடுவதற்காக சுற்றுப் பயணம் மேற்கொண்டது.[1][2] இத்தொடர் 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் போட்டிகளில் ஒரு பகுதியாக அமைந்தது.[3][4] ஆரம்பத்தில், இத்தொடர் மார்ச் 2020 இல் இடம்பெறுவதாக இருந்தது, ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.[5] 2020 திசம்பரில், இங்கிலாந்து மற்றும் வேல்சு துடுப்பாட்ட வாரியம் பயணத்திற்கான தேதிகளை உறுதிப்படுத்தி,[6] இரண்டு தேர்வு ஆட்டங்களும் காலியில் நடத்தப்படும் என அறிவித்தது.[7]
இங்கிலந்து அணி முதல் ஆட்டத்தை 7 இலக்குகளாலும்,[8] இரண்டாவது ஆட்டத்தை 6 இலக்குகளாலும் வென்று தொடரை 2–0 என்ற கணக்கில் வென்றது.[9] இது இங்கிலாந்து அணியில் வெளிநாட்டுப் பயணங்களில் ஐந்தாவது தொடர் வெற்றியாகும்.[10][11]
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
ரமேசு மெண்டிசு (இல்) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
ஜேம்ஸ் அண்டர்சன் (இங்) தேர்வுப் போட்டிகளில் தனது 30-வது ஐந்து-இலக்குகளைக் கைப்பற்றினார்.[18]
தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் இங்கிலாந்து அணி ஒரே இன்னிங்சில் திருப்புப் பந்துவீச்சு மூலம் 10 இலக்குகளைக் கைப்பற்றிய ஒரே அணியாகவும், சுழல் பந்துவீச்சு மூலம் ஒரே இன்னிங்சில் 10 இலக்குகளைக் கைப்பற்றிய ஒரே அணியாகவும் சாதனை படைத்தது.[19]