இந்தியத் துடுப்பாட்ட அணிஇலங்கையில் 2015 ஆகத்து 6 முதல் செப்டம்பர் 1 வரை மூன்று தேர்வுத் துடுப்பாட்டங்களில் கலந்து கொண்டது.[1] இலங்கை அணியின் துடுப்பாளர் குமார் சங்கக்கார இத்தொடரின் இரண்டாம் தேர்வுப் போட்டியின் பின்னர் பன்னாட்டுப் போட்டிகளில் இருந்து இளைப்பாறவிருப்பதாக 2015 சூன் 27 அன்று அறிவித்தார்.[2] இச்சுற்றுப் பயணத்தின் போது இந்திய அணி இலங்கையின் பிரெசிடென்ட் XI அணியுடன் ஒரு மூன்று-நாள் பயிற்சிப் போட்டியிலும் விளையாடியது.[3]
இந்திய அணியின் மூன்று தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான் (134), லோகேசு ராகுல் (108), செதேஷ்வர் புஜாரா (145) சதங்கள் அடித்தனர். இது தேர்வுத்தொடர் ஒன்றில் இடம்பெற்றது 5வது தடவையாகும்.[4]
மூன்று-ஆட்டத் தேர்வுத் தொடரில், இந்திய அணி 2–1 என்ற கணக்கில் இலங்கை அணியை வென்றது. இது 22 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய அணி இலங்கையில் பெற்ற முதலாவது தேர்வுத் தொடர் வெற்றியாகும். அத்துடன் 2011 இற்குப் பின்னர் இந்திய அணி பெற்ற முதலாவது வெளிநாட்டுத் தேர்வுத்தொடர் வெற்றியும் ஆகும்.
நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடியது.
இந்தியாவின் முதலாவது ஆட்டத்தின் 1வது நாளில் மழை காரணமாக 15 ஓவர்களுடன் முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இரண்டாம் நாளில் 96வது ஓவருடன் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
3ம் நாளில் இந்தியாவின் இரண்டாம் ஆட்டத்தின் போது 9வது ஓவரில் மழையினால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.