இலங்கைத் துடுப்பாட்ட அணி 2022 பெப்ரவரியில் ஆத்திரேலியாவில் ஐந்து பன்னாட்டு இருபது20 (இ20ப) போட்டிகளில் விளையாடுகிறது.[1][2] இச்சுற்றுக்கான விபரங்களை ஆத்திரேலியத் துடுப்பாட்ட வாரியம் 2021 மே மாதத்தில் அறிவித்தது.[3][4] 2022 சனவரியில், கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கத்தைக் குறைப்பதற்காக[5] ஆத்திரேலியா சுற்றுப்போட்டிகள் நிகழும் நாட்களையும் இடங்களையும் மீள்பார்வைக்குட்படுத்தியது.[6]
ஆத்திரேலியா 20 ஓட்டங்களால் வெற்றி (ட/லூ) சிட்னி துடுப்பாட்ட அரங்கம், சிட்னி நடுவர்கள்: சோன் கிரைக் (ஆசி), சாம் நொகாசுக்கி (ஆசி) ஆட்ட நாயகன்: ஆடம் சாம்பா (ஆசி)
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
மழை காரணமாக இலங்கை அணியின் வெற்றி இலக்கு 19 நிறைவுகளுக்கு 143 ஓட்டங்கள் என நிர்ணயிக்கப்பட்டது.
யோசு இங்கிலிசு (ஆசி) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.